பக்கம்:அறிவியற் சோலை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் விளையாட்டு 51 வட்ட- _ ___ _ வெள்ளம் இழுத்துக்கொண்டு போய் சங்கமத்தில் சேர்த்துவிடவே, அவனது ஆட்டத்தில் தன் நாட் டத்தை யெல்லாம் செலுத்தியிருந்த அவனது அரு மைத் தலைவி ஆதிமந்தி பைத்தியம் பிடித்தவளாய், அவனைத் திசைதோறும் தேடிச் சென்று எதிர்ப்பட் டோரை யெல்லாம் நோக்கி, "என் காதலன், கச்சினன் கழலினன் தேன்தார் மார்பினன், அவனைக் கண் டீரோ” என்று கதறி அழுது அலைந்து கொண்டிருந் தாள். உள்ளத்தை உருக்கும் இவ்வுணர்வுச் சித்திரத் தினை அகநானூறு என்னும் நூலிலே காணலாம். அப்பாடல் கீழே தரப்பட்டுள்ளது. ' கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன் வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியல் சுரியலம் பொருநனைக் காண்டி ரோவென ஆதி மந்தி பேதுற்று இனைய சிறை பறைந்து இரை இச் செங்குணக்கு ஒழுகும் அம் தண் காவிரி போல.” அகநானூற்றில் காணப்படும் இந்தப் பரிதாபகரமான நிகழ்ச்சி, உயிரையும் காதலையும் கூடப் பணையமாக வைத்தாடிய தமிழ் விளையாட்டின் ஒரு சோகமான முடிவாகும். இளம் பிள்ளைகள் ஒருவரோடொருவர் தழுவியும் ஆடியும், கரையிலுள்ள பெரிய மருத மரத் தின் கோடுகளில் ஏறி ஆழமான மடுவின் கண் துடு மெனக் குதித்து அடியிலுள்ள மணலை எடுத்து மேலே கிளம்பி வந்து கரையில் நிற்போருக்குக் காட்டியும் தம் ஆற்றலை வெளிப்படுத்துவர். மருத நிலத்தில் ஒருபுறத்தில் களங்களில் தாள் களிலிருந்து நெல்லைப் பிரிக்கக் கடாக்களைப் பூட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/55&oldid=739292" இலிருந்து மீள்விக்கப்பட்டது