பக்கம்:அறிவியற் சோலை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அறிவியற் சோலை அதன்மீதுவிட்டு நாவளோ ' எனறு குதுாகலமாகப் பாடும் மக்கள் ஓசையும், மலைச் சரிவுகளில் ஏராளமாகக் கிடைக்கும் பலாச்சுளைகளைப் பரப்பி, அதன் கொட்டை கள் பிரியும் வண்ணம் யானைக் கன்றுகளைப் பூட்டி யோட்டும் சிறுவர்களின் பாட்டும் இடைவிடாது கேட்டுக்கொண்டே யிருக்கும். இவ்வாறு தமிழர் வாழ்க்கையில் தொழிலும் விளையாட்டும், கலையும் ஒன்ருேடொன்று பின்னிக் கிடக்கின்றன. ஏர் மங்கலம், முகவைப் பாட்டு, நடவுப் பாட்டு, நெல்லரி கினை என்று இவ்வாறெல்லாம் தமிழ்ப் பாட்டுகளும் பண்புகளும் தமிழர் வாழ்க்கையையும் விளையாட்டையும் இணைக்கின்றன நெய்தல் கடலும் கடலைச்சார்ந்த இடமும் நெய்தல நில மெனப்படும். இந்நிலத்தில் வாழும் பரதவர்கள் மீன் கோட் பறையை முழக்கிக்கொண்டு ஆரவாரத்தோடு கடலில் செல்வர் ; நல்ல சுரு மீன்கள் கிடைத்தால் மகிழ்ச்சியால் கரை சேர்ந்து கடல் தெய்வத்திற்குப் பூசை போட்டு விளையாடுவர். நெய்தல் நிலத்துக் கடற்கரையில் திரட்டிய உப்பை வண்டியிலேற்றி விற்று, வீடு திரும்பும் உமணர்கள் உடன்கொண்டு வந்த குரங்குக் குட்டி, அவர்கள் குழந்தைகளோடு கிளிஞ்சலுக்குள் முத்தைப்போட்டு ' கிலு கிலு ' ஆட்டி விளையாடுவதாகச் சிறு பாணுற்றுப் படையில் ஓர் அழகான காட்சி காணப்பெறுகின்றது. குழந்தை களுக்கு விளையாட்டுக் காட்டுபவர், ! கிலு கிலு T ஆட்டி விளையாடுவர். அழும் குழந்தையினைச் சமாதானப் படுத்துவதற்கு, இவ்விளையாட்டுப் பெரிதும் துணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/56&oldid=739293" இலிருந்து மீள்விக்கப்பட்டது