பக்கம்:அறிவியற் சோலை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் விளையாட்டு 53


செய்கின்றது. ஓலையால் செய்த ஒரு விளையாட்டுக் கருவி இன்று கிலுக்கு ' என்று வழங்கப்படுகின்றது. இதனுள் பொடிக் கற்களைப் பெய்திருப்பர். இதனை ஆட்டி விளையாட்டுக் காட்டுங்கால் எழும் ஒலியானது. குழந்தைக்கு இன்பம் பயப்பதாய் விளங்கும். இது போன்றே, உமணர்கள் தங்களது குழந்தைகளுக்கு விலையுயர்ந்த முத்துக்களைச் சிற்பியில் அடைத்து, அழகான கிலுக்குகள் செய்து கொடுத்தனர். அவர் கள் வளர்த்த பெண் குரங்குகள், அக் கிலுகிலுப்பை களைக் கையிற்கொண்டு குழந்தைகளுடன் விளை யாடின. இதனை, நோன்பகட் டுமனர் ஒழுகையொடு வந்த மகாஅ ரன்ன மந்தி மடவோர் நகாஅ ரன்ன நளிநீர் முத்தம் வாள் வா யெருந்தின் வயிற்றகத் தடக்கித் தோள்புற மறைக்கு நல்கூர் ரு சுப்பின் உளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற கிளர் பூட் புதல்வரொடு கிலிகிலி யாடும் தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்.” என்று சிறுபானற்றுப் படை சித்தரிக்கின்றது. பிற விளையாட்டுகள் பயங்கரமான போர்க்களத்தில் போர் முடிந்ததும் வெற்றி பெற்ற பக்கத்தில் விளையாட்டு ஆரம்பிக்கும். வீரர்கள் வரிசையாக அமர்ந்திருக்க, பலவகைக் கூத்து களுக்கும் ஆட்டங்களுக்குமிடையில் கள் விருந்து நடைபெறும். அக்காலத்துக் கொண்டாடப்படும் விழா கள் வேள்வி எனப்படும். இரவில் அழும் குழந்தை களுக்கு நாம் அம்புலியைக் காட்டி விளையாட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/57&oldid=739294" இலிருந்து மீள்விக்கப்பட்டது