பக்கம்:அறிவியற் சோலை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் பாரி தோற்றுவாய் பவழமும் முத்தும் கொழித்த பண்டைத் தமிழகத் திலே வரையாது வழங்கும் வள்ளல்கள் வாழ்ந்து, தண்டமிழையும், தண்ைெளிமிக்க தமிழ்ப் புலவர் களையும் பொன்னேபோற் போற்றி வந்தனர் என்பது நாமறிந்ததே. அத்தகைய கொடையிற் சிறந்த கோமான்களின் வரிசையில் கடையேழு வள்ளல்கள் முன்னணியில் நிற்போராவர். அக் கடையேழு வள்ளல்கள், பாரி, காரி, ஓரி, நள்ளி, அதியன், குமணன், பேகன் என்போராவர். இவர்களிலே பாரி என்போனே தலைசிறந்தவனுகத் தமிழ்ப்புலவர் பலரால் பாராட்டப் பெற்றுள்ளான். எனவே இவனை வள்ளல் தலைவன் என்று கூறுவதில் தவறில்லை என்க. இத்தகைய சிறப்புவாய்ந்த பாரி, வேள் என்னும் பட்டம் பெற்ற உழுவித்துண்போர் வகை யினனுகும் ; முக்கனி விளையும் முந்நூறு ஊர்களை யுடைய பறம்பு நாட்டிற்கும், அதன் மலைக்கும் தலைவன். இப்பறம்பு பண்புடைப் பாண்டிவள நாட் டைச் சேர்ந்ததாகும். பாரோர் கண்டிலா இப் பாரி வள்ளல் நிழலில்லாத நீண்ட வழியில் தனி மரம்போல நின்று நாட்டையும் குன்றையும், பாவலர்க்கும் நாவ லர்க்கும் வழங்கி, இவ் வையகம் முழுதும் தன் புகழ் பரக்க வாழ்ந்தவன். இவனது வரையா வண்மை, ' கொடுக்கிலாதானைப் பாரியே யென்று கூறினும் கொடுப்பாரிலை ' என்று சிவபெருமானைத் தவிர வேறு எவரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/60&oldid=739298" இலிருந்து மீள்விக்கப்பட்டது