பக்கம்:அறிவியற் சோலை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அறிவியற் சோலை போர் எவ்வளவு நாள் நடந்தது என்பதை ஒரு வரும் திட்ட வட்டமாக வரையறுத்துக் கூறவில்லை. இப் போரினைக் குறித்துப் பாடியுள்ள நக்கீரர் யாண்டு பல கழியினும் ' என்று குறிப்பிடுவதால், பல ஆண்டுகள் முற்றுகை நீடித்திருந்ததெனக் கூறலாம். மேலும் முற்றுகைக் காலத்தில் ஆம்பல் பூவையும் ஐவன நெல்லையும் உண்டு ஊக்கம் தளராது போர் புரிந்து வென்றனரென்றும், இப்போரிலே பாரிக்கு வலக்கை போல இருந்து உதவி புரிந்தவர் கபிலரென்றும் நக்கீரர் தமது பாடலில் கூறியுள்ளார். முற்றுகைக் காலத்தில் குருவிகளைப் பழக்கி நெற் கொண்டுவரச் செய்து, ஆம்பல் பூவுடன் கலந்து உண்டு வாழ்வு நடாத்தி வெற்றி பெற்ருர்கள் என்பதே தொன்றுதொட்டுச் செவிவழியறியும் செய்தியாகும். ஆனல் குருவிக் கதை கற்பனையே யொழிய உண்மை யில் நடந்ததன்று இதற்குத் தக்க சான்றில்லை யாதலால் - அது இயற்கைக்கு மாறுபாடானதால் அது கற்பனைக் கதைதான் என்று கொள்ள வேண்டும். முற்றுகை நீடித்ததனுல் மூவேந்தரும் சலிப் புற்றனர். அதுகால் கபிலர் அவர்களிடம் போந்து, ' பெருமை பொருந்திய முரசினையுடைய நீவிர் மூவரும் எத்துணைக் காலம் முற்றுகை செய்யினும், பறம்பு என்னும் அரணில் உள்ளார்க்கு உணவுக் குறை உளதாகாது. மூங்கில் நெல், வள்ளிக் கிழங்கு, பலாப் பழம், தேன் என்னும் நான்கு பொருளையும் அவ்வரண் மிகுதியாக வுடைத்து. இவை உழவரது முயற்சியின்றியே இயற்கையிற் கிடைப்பன. நீங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/62&oldid=739300" இலிருந்து மீள்விக்கப்பட்டது