பக்கம்:அறிவியற் சோலை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் பாரி 59 _ -- -- - = -- _ - - - - -- _ --- - ----- _ ----- - _ இடந்தோறும் உங்களது தேர்களையும், மரந்தோறும் உங்களது யானைகளையும் நிறுத்தினுலும்கூட நாங்கள் சளைக்க மாட்டோம். உங்களுக்குத் தோல்வியேதான். ஆல்ை பாரியை வெல்லுவதற்கு ஒரேவொரு வழிதான் உண்டு. அதாவது அவன் கலைப் பித்தணுவான். உங்களது வீரம் அவனிடம் செல்லாது. கலையால் மாத்திரம்தான் அவனை வெல்ல முடியும். பாணரும் கூத்தரும், விறலியரும் அவனது நாட்டில் எங்கும் சிறப்புடனிருக்கின்றனர். ஆதலின் நீங்கள் போர்க் கோலம் மாற்றி, உங்களது துணைவியர் விறலியர் வேடம் புனைந்து 월 -, நீங்கள் யாழுடன் பாணர் வேடம் புனைந்து <曼y母 வந்தால், உங்களுக்கு அவன் தனது நாடும் குன்றும் ஒருங்கு ஈவான் ” என்று பாரியது புரவலர்க் கருமையும் இரவலர்க் கெளிமையும் எடுத்துரைத்தார். இறுதியில் பாரி சூழ்ச்சியால் மூவேந்தர்களாலோ அன்றி அவர்களால் ஏவப்பட்டவர்களாலோ கொல்லப் பட்டிருக்கவேண்டும். ஆல்ை இதற்குத் தக்க சான்றில்லை. பாரி மகளிர் பாரிக்கு இரு மகளிர் இருந்தனர். இவ்விருவரும் தந்தையினிடத்துப் பேரன்பு மிக்கவர்கள் தமிழ்ப் புலவர்களாகவும் விளங்கினர். பாரி இறந்த பின் நிலாக் காலத்தில் ஒரு நாள் பாரி மகளிர், தாம் இதற்கு முந்திய நிலாக் காலத்தில் தமது அரசு நிலை யிட்ட திருவுடை நகர்க் கண்ணே இனிது மகிழ்ந்து விளையாடியதும், அடுத்த நிலாக் காலத்துத் தாம் 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/63&oldid=739301" இலிருந்து மீள்விக்கப்பட்டது