பக்கம்:அறிவியற் சோலை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அறிவியற் சோலை தந்தையிழந்து தண்பறம்பிழந்து தமியராய்த் துச்சி லொதுங்கித் துயர்மிக நின்றதும் தம்முள்ளத்தே தோன்ற அப்பொழுது மனமுருகி, அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையு முடையேம் எங்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தர் எங் குன்றுங் கொண்டார் யாம் எந்தையு மிலமே ' என்று பாடியுள்ளனர். பாரிக்காகவே உயிர் வாழ்ந்த கபிலர், பாரி இறந்த பின்னர் அவனது குடும்பப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். பாரி மகளிர் இருவரையும் தகுந்த தலைவனிடம் ஒப்புவித்தற் பொருட்டுக் கபிலர் அரும்பாடுபட்டார். ஊர் ஊராக அலைந்தார். இள விச்சிக்கோ' என்பவனிடம் சென்று இம்மகளிரது உயர்குடிப் பிறப்பு முதலியவற்றை எடுத்துரைத்து, இவர்களை மணஞ் செய்துகொள்ளும்படி அவனை வேண்ட, அவன் உடம்படாமையில்ை இருங்கோவேள் என்பானிடஞ் சென்று அவனையும் அவ்வாறு வேண்ட் அவனும் அங்ங்னமே உடம்படாய்ை மறுக்க, இதற்காக அவனை முனிந்து பாடி, பாரி குடிக்கும் மூவேந்தர்க் கும் உண்டாகிய பகைமைபற்றி அரசரொருவரும் இவர்களை மணஞ் செய்துகொள்ள இசையாமையால் மனம் நொந்து கபிலர் அம் மகளிரைச் சில பற்றற்ற அந்தணர்களிடம் அடைக்கலப்படுத்தி விட்டுத் திருக் கோவலூரில் வடக்கிருந்தாரென்றும், தீக்குளித்தா ரென்றும் தெரிய வருகின்றது. புகழுற வாழ்ந்து மறைந்த அந்தப் பாரியின் அருமை மகளிர்க்கு இவ் வாறு மணம் முடியாது நேர்ந்த தவிப்புதான் நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/64&oldid=739302" இலிருந்து மீள்விக்கப்பட்டது