பக்கம்:அறிவியற் சோலை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. அறிவியற் சோலை _ பாரியின் சிறப்பு பாரியின் அன்பு, கொடை, புகழ், வள்ளன்மை இவை குறித்துக் கூறவந்த கபிலர், செந்தமிழ் நாட்டுச் செந்நாப் புலவர்கள் எங்கும் எப்பொழுதும் பாரி, பாரி என்று இவன் ஒருவனையே புகழ்கிருர் களே இவ்வுலகில் இவன் ஒருவன்தானு இவ்வாறு உதவுகிருன்? மக்களில் ஒருவரும் இல்லை என்ருலும், இவ்வுலக உயிர்களை எல்லாம் காப்பாற்றும் மாரி இல்லாமலா போய்விட்டது? " என்று பழிப்பதுபோல் புகழ்ந்து கூறியிருப்பது படித்து இன்புறுதற்குரிய தாகும். அப்பாடல் கீழே தரப்பட்டுள்ளது. “ பாரி பாரி என்று பல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் ; பாரி ஒருவனும் அல்லன் மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/68&oldid=739306" இலிருந்து மீள்விக்கப்பட்டது