பக்கம்:அறிவியற் சோலை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவியற் சோலை களை ஒடித்து எறிந்த மாவீரன் இலிங்கன். களின் கண்கண்ட கடவுள்-உரிமையின் உறைவிடம் -விடுதலை வீரன் இலிங்கன். நீக்ரோக் s T

  • {

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை பான் ' என்ற பொன் குறளுக்குத் தன் வாழ்க்கையில்ை உரை திட்டிக் காட்டியோன் இலிங்கன். ஆபிரகாம் லிங்கன் வரலாறு அடிமை மக்களின் உள்ளத்திலே உரிமை உணர்வை ஊட்டவல்லது ; உணர்ச்சிக்கனலை மூட்டவல்லது. மாணவர்களுக்குத் தியாக உணர்வை ஊட்டி ஊக்கமளிப்பது; முடிவில் மக்கட் சமுதாயத்தை மாற்றித் திருத்தி மாண்புறச் செய்ய வல்லது. மிகமிகச் சாதாரண குடும்பத்திலே பிறந்து அன்ருட வாழ்க் கைக்காகப் போராடி, அப்போராட்டத்திற்கிடையே யும் பல மைல்கள் நடந்து சென்று கல்வி கற்று, வழக் கறிஞராகிப் பிற்காலத்திலே அமெரிக்க நாட்டின் தலைவராகி, வலியிழந்து பொலிவிழந்து, வாழ்விழந்து தாழ்வடைந்து ஆடு மாடுகளைப்போல வாழ்ந்த ஆயிர மாயிரம் நீக்ரோக்களின் அடிமை விலங்கினை ஒடித் தெறிந்த மாவீரன், விடுதலை வீரன் இலிங்கன் வரலாறு மிகச் சிறந்ததொன்ருகும். இளமையும் கல்வியும் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 இல் அமெரிக்கா வில் கெண்டகி மாநிலத்தில் உள்ள காட்டிலே ஒரு குடிசையிலே ஆபிரகாம்லிங்கன் பிறந்தான். இலிங் கனின் தந்தை தாமசு லிங்கன். அவர் ஒரு விறகு வெட்டி. அன்ருட வாழ்வுக்கே அவர் மிகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/70&oldid=739309" இலிருந்து மீள்விக்கப்பட்டது