பக்கம்:அறிவியற் சோலை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை வீரன் 67 உழைக்கவேண்டியிருந்தது. அந்த நிலையிலே அவருக் கெங்கே கல்வியிலே - ஆபிரகாம்லிங்கன் படிப்பிலே அக்கரை இருக்கப் போகிறது ? அதுமட்டுமல்ல. இலிங்கன் ஒய்வு நேரங்களில் படிப்பதுகூட அவருக்கு வெறுப்பாக இருந்தது. அந்த வெறுப்பிலிருந்து இலிங்கனைக் காப்பாற்றியது அவன்றன் அருமை அன்னையே. இந்த அன்னை இலிங்கனிடம் அன்பாக இருப்பார் ; சமயப்பற்று மிக்கவர். காட்டு வாழ்க்கை யிலே நாட்டமில்லாதவர். இவ்வன்னையே இலிங்கனின் இளமைக் கல்விக்கு உறுதுணையாக இருந்தவர். ஊக்கமளித்தவர். நாடோடிகளைப் போலக் காடு களிலே பலப்பல இடங்களிலே வாழ்ந்த இலிங்கன் குடும்பம் 1816 இல் இந்தியான என்ற இடத்திற் குடியேறியது. குடியேறிய சில ஆண்டுகளிலே அருமை அன்னையை இழந்தார் இலிங்கன். அவர் அடைந்த துக்கத்தின் அளவு வரையறைக்குட் பட்ட தன்று. இவ்வுலகிலே என் கடவுள் என் அன்னையே ' என ருர். இலிங்களுல் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்ல முடிய வில்லை. காரணம் ஏழ்மையே. வயிற்றைக் கழுவ நாள்தோறும் தந்தையோடு மரம் வெட்டுவார் , மண் வெட்டுவார் , அண்டை அயலாருக்குத் துணையாக வேலையும் செய்வார். இத்தகைய வாழ்வுப் போராட் டத்திற் கிடையே கிடைத்த ஓய்வு நேரங்களில் படிப் பார் ; எழுதுவார் ; அவரது எழுதுகோல் மரக்கரி ; ஏடு மரப்பலகை. சில ஆண்டுகள் சென்ற பின்புதான் தாள் கிடைத்தது. அத்தாளில் பறவையின் இற கில்ை மரப்பாலில் தோய்த்து எழுதிப் படிப்பார். நூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/71&oldid=739310" இலிருந்து மீள்விக்கப்பட்டது