பக்கம்:அறிவியற் சோலை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அறிவியற் சோலை களுக்காகப் பல மைல்கள் கால்நடையாகவே நடந்து சென்று படித்து வருவார். கையிற் கிடைத்த ஒவ் வொரு நூலையும் விடாது படித்து முடித்துவிடுவார். 50 மைல் சுற்றளவிலே அவர் காதுக் கெட்டிய எல்லா நூல்களையும் படித்து முடித்திருந்தார். இவ்வாறு வறுமை வாழ்விலும் கல்வி மீது தனியா வேட்கை கொண்டு, பருகுவனன்ன ஆர்வத்தோடு நூற்களைப் படித்து வந்தார். இலிங்கன் இயற்கையாகவே பேச்சாற்றல் வாய்க் கப் பெற்றிருந்தார். அஃதோடு குட்டிக் கதைகளில் கெட்டிக்காரர். மேலும் நீதியிலே மிகுந்த பற்றும் நாட்டமும் கொண்டிருந்தார். ஆழ்ந்த சிந்தனை, அந்தச் சிந்தனையிலே தோன்றும் கருத்துக்களை அங்கைச் செங்கனியெனத் தெளிவாக விளக்கிக், கேட்டார்ப் பிணிக்கவும், கேளாரும் வேட்பவும் மொழி யும் பேச்சாற்றல், நடுநிலை பிறழா நெஞ்சம் ஆகிய மூன்றும் சேர்ந்து, இலிங்கனைச் சட்டம் பயிலக் கட்டாயப்படுத்தியது ; ஆணுல் ஏழ்மை குறுக்கிட்டது; தடைக் கல்லாயிருந்தது. எனினும் சட்டம் பயிலும் வேட்கை அவர் உள்ளத்திலே காட்டுத் தீயெனக் கொழுந்துவிட்டெரியலாயிற்று. அந்தத் தீ தந்த முறுக்கிலே அடிக்கடி பல மைல்கள் நடந்து நடந்து செல்வார் ; நண்பர்களின் அலுவலகங்களில் அமர்ந்து சட்ட நூற்களைக் கற்பார். இலிங்கன் தனது 19 ஆம் வயதில் ஆறடி நாலங்குல உயரம் இருந்தார். அவரது கை கால்கள் மிகவும் நீண்டிருந்தன. உருண்டு திரண்டு இருந்த கட்டான உடலும், அதற்கேற்ற உயரமும் விரிந்த மார்பும் கொண்ட இலிங்கன், உடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/72&oldid=739311" இலிருந்து மீள்விக்கப்பட்டது