பக்கம்:அறிவியற் சோலை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை வீரன் 69 வலியால் வெல்வார் எவருமின்றி விள ங்கினர்; பெரும் பெரும் மரக்கட்டைகளையெல்லாம் எளிதாகப் புரட்டித் தள்ளிவிடுவார். எனவே இலிங்கன் தானிருந்த பகுதி யிலே வலிவு மிக்க உடலும் பொலிவுமிக்க அறிவும் ஏற்றமும் கொண்டு தோற்றமளித்துக் கொண்டிருந் தார். விடுதலை வித்து உடல் வலிமிக்க இலிங்கன் தனது வாழ்க்கைச் செலவுக்கு வேண்டிய செல்வத்துக்காக 1828 இல் ஒரு படகோட்டியார்ை. அவர் தனது வாழ்க்கைப் படகு, நீர்ப்படகு ஆகிய இரு படகுகளையும் செலுத்திய இடம் மிசிசிபி (Mississipi) என்ற பெரு நதியாகும். நாள் தோறும் பல நூறு மைல்கள் மிசிசிபியிலே படகோட்டு வார். தினந்தோறும் மிசிசிபியிலே பல மைல்கள் படகோட்டி கியூ ஆர்லியன்சு (New Orleans) என்ற நகரச் சந்தைக்குப் பற்பல விற்பனைப் பொருட் களைக்கொண்டு செல்வார். இவ்வாறு நதியிலே பட கோட அவரது வாழ்க்கைப் படகும் ஒருவாறு ஒடிக் கொண்டிருந்தது. வழக்கம்போல ஒரு நாள் அவர் படகோட்டி நியூ ஆர்லியன்சு நகரச் சந்தைக்குச் சென்றிருந்தார்; அங்கே விற்பனைக்கு வந்திருக்கும் ஆடுகளைக் கண்டார்; மாடுகளைக் கண்டார். கண்டவை இவை மட்டுமல்ல; தன்னுெடொத்த நீக்ரோ மனிதர் கள் பலர் ஆடுகளைப்போல, மாடுகளைப்போல கரங் களிலே விலங்குகள் மாட்டப்பட்டு, சாட்டையடிகளைத் தாங்கிக்கொண்டு கண்ணிர் சொரிந்து நிற்கும் காட்சி யையும் கண்டார். "நம்மைப் படைத்த கடவுள்தான் அவர்களையும் படைத்தார். எனவே பிறப்பொன்றே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/73&oldid=739312" இலிருந்து மீள்விக்கப்பட்டது