பக்கம்:அறிவியற் சோலை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அறிவியற் சோலை _ -- ----------- நண்பர்களெல்லாம் எங்கே இலிங்கனுக்கு அறிவு பேத லித்து விடுமோ என்றஞ்சினர்கள். வித்து முளைத்தலும் விடுதலை முழக்கமும் இலிங்கனின் பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டாண்டுகளே இருந்தன. இலிங்கனின் உள் ளத்திலே விதைக்கப்பட்ட விடுதலை வித்து முளைவிட லாயிற்று. 'அடிமை ஒரு குற்றம், அஃதில்லையேல் உலகிலே குற்றம் என்றே ஒன்று இல்லை' என்று முழக்கமிடலானர் இலிங்கன். அவரது அடிமை ஒழிப்புப் பேச்சுக்கள், வெளிப்பட்ட கருத்துக்கள் நாடெங்கும் ஒலிக்கலாயின; மத்திய மாநிலச் சட்ட மன்றங்களிலே எதிரொலித்தன. மேற்கு அமெரிக்கா விலே புதியதாக அமைக்கப்பட்ட டோக்டாசு ஆரிகன் என்ற இடங்களிலே அடிமை முறையினை ஒழிக்க வேண்டுமென முழக்கமிட்டார்; கொலம்பியா மாவட் டத்திலே அடிமைகளுக்கு விடுதலை வழங்க வேண்டு மெனப் போராடினர். ஆனல் அக்காலச் சூழ்நிலை யிலே அவரது கொள்கைக்கு ஆதரவில்லை. எனவே அடுத்து நடந்த அமெரிக்க நாட்டுப் பேரவைத் தேர்தலிலே வெற்றி பெறவில்லை வழக்கறிஞர் வாழ்வு இந்நிலையிலே 1842இல் மேரி டாத் என்ற அழகு மாது இலிங்கனையும் ட்ச்டீபன் ஏ. தெக்லா வையும் பகைவர்களாக்கினுள். முடிவில் வெற்றி பெற்றது இலிங்கனே. அம்மாதினை இலிங்கன் 1842இல் திருமணம் செய்து கொண்டார். அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/76&oldid=739315" இலிருந்து மீள்விக்கப்பட்டது