பக்கம்:அறிவியற் சோலை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1854இல் அவர் " கானசு - நிப்ரேக்கா " என்ற அடிமை ஆதரவுச் சட்டத்தை அமெரிக்க நாட்டு மன் றத்தில் நிறைவேற்றினர். அஃதாவது கானசு, நிப்ரேக்கா என்ற இடங்களிலே மக்கள் விரும்பினுல் நீக்ரோஅடிமைகளை வைத்துக் கொள்ளலாம் விற்க லாம் என்பதே அச்சட்டம். இச்சட்டம் வடமேற்கு அமெரிக்காவிலே அடிமை முறையினை நிலையாக்கப் பெருந்துணை புரிந்தது. இச்சட்டத்தை நிறை வேற்றிய தெக்லா அச்சட்டத்திற்கு ஆதரவு தேட, இல்லிய்ைசு வந்து பெரும் பெரும் பிரசாரங்கள் செய்யலானுர். இலிங்கனின் உள்ளத்திலே குமுறிக் கொண்டிருந்த எரிமலை வெடிக்கலாயிற்று அடிமை முறையினை எதிர்த்துச் சூருவளிப் பிரசாரம் செய்ய லானுர்; ஒரமயம் சுமார் மூன்று மணி நேரம் அடிமைச் சட்டத்தை எதிர்த்து வீர முழக்கம் செய்தார். அப் பேச்சே அவரை விடுதலை வீரன் என நாடறியப் பறையறையலாயிற்று. தேர்தல் அடிமை முறையினைத் தேர்தல் பிரச்னையாக் இலிங்கனும், ஏ. தெக்லாவும் அமெரிக்க நாட்( மன்றத் தேர்தலுக்கு நின்றனர். இருவருக்கும் இடையே பற்பல சொற்போர்கள் ஏற்பட்டன. அவர்கள் சந்தித்த மேடைகள் பல. மக்கள் நாலா பக்கங்களிலிருந்தும் இவ்விருவர்தம் சொற்போர் களைக் காணக், கேட்க விரைந்து பறந்து வரலா யினர். மேடைதோறும் மக்கள் கூட்டம் பெருகி இருந் தது. ஏ. தெக்லாவின் பேச்சுக்கள் தெளிவாகவும் வாதங்கள் திறமையாகவும் இருந்தன. ஆனல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/78&oldid=739317" இலிருந்து மீள்விக்கப்பட்டது