பக்கம்:அறிவியற் சோலை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 அறிவியற் சோலை சேர்ந்து வாழத் தலைப்பட்டான். அப்பொழுது ஒருவ ருடன் ஒருவர் பேச, கருத்துக்களைத் தெரிவிக்க, அள வளாவ, பழக ஏதேனும் ஒரு ஒலி முறை வேண்டிய தாயிற்று. முதலில் மனிதர்கள் விலங்கினங்களைப் போன்றே, பறவைகளைப் போன்றே பேசி வந்தனர். இத்தகைய ஒலிமுறை இன்றும் கலிபோர்னியாப் பகுதியில் உண்டென்பர். உணவிலும், உடையிலும், பிறவற்றிலும் மனிதர்கள் முன்னேறியது போலவே, பேச்சு மொழியிலும் முன்னேறினர். மனிதர்கள் பலர் சேர்ந்து கட்டிடங்கள் கட்டுவது போன்று, மனிதர்கள் பலர் சமுதாயமாக-கூட்டமாகச் சேர்ந்து மொழியினை வளர்க்கலானர்கள். இவ்வாருகத் தோன்றிய மொழிகள் உலகில் பல. ஆனல் அவையனைத்தும் ஒரே காலத்தில் தோன்றி யவை அல்ல என்க. எனவே பலகாலத்தில் தோன்றிய பல்வேறு மொழிகள் உலகில் நிலவின. அவற்றுள் இயற்கையோடு இயைந்து வளர்ந்த மொழிகள், நன்கு வளம்பெற்றுச் செழித்து ஓங்கி வளர்ந்தன ; திட்ப நுட்பம் செறிந்து மாட்சியோடு காட்சியளித்தன. எடுத்துக்காட்டு தமிழ் என்க. இயற்கையோடு இயைந்து வளராத மொழிகள் பலவற்றுள், சில குறைந்த வாழ்நாள் பெற்று வீழ்ந்தன. சில தம்முள் ஒன்றி, உருமாறி ஒரு மொழியாகி வளரலாயின. சில பலவாகக் கிளைத்தன. இம்மூவகை மொழிகளிலும் சில தம்மைத் தியாகம் செய்து ஒழிந்தன; சில தம்மைத் தியாகம் செய்து வீழாது மேலும் மேலும் வளர்ந்து வாழலாயின. பின்னதற்குத் தமிழையும் முன்னதற்கு வடமொழியையும் காட்டலாம். இது நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/8&oldid=739319" இலிருந்து மீள்விக்கப்பட்டது