பக்கம்:அறிவியற் சோலை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

அறிவியற் சோலை

கல்வி மன்றத்திலே இலிங்கன் ஓர் அரிய பெரிய கேட்டார் பிணிக்கும் பேச்சொன்றை நிகழ்த்தினார். அப்பேச்சினை நாடும் ஏடும் புகழலாயின. ஒவ்வொரு ஏடும் பேச்சினைப் பல்லாயிரக் கணக்காக அச்சிட்டு வெளியிட்டன. 'நியூயார்க் டிரிபியூன்' என்ற நாளிதழ் “எடுத்த எடுப்பிலேயே இவ்வளவு அழகாக இது வரை எவரும் பேசவில்லை” எனப் புகழலாயிற்று. இப் பேச்சே 6-11-1860இல் நடந்த தேர்தலில் இலிங்கனை அமெரிக்க நாட்டுக் குடியரசுத் தலைவராக்கிற்று .

உள் நாட்டுப் போர்

அமெரிக்க நாட்டுக் குடியேற்ற நாடுகளிலே தெற்கே ஏழு மாநிலங்களிலேதான் அடிமைகள் மிகுதியாக வாழ்ந்திருந்தனர். அங்கே உள்ள நிலச் சொந்தக்காரர்கள் அடிமைகளைக் கொண்டு ஆயிரக் கணக்காகப் பணம் ஈட்டினர். அவர்கள் இலிங்கன் தலைவரானதும் கிலிகொள்ளலாயினர். இலிங்கன் தலைவரானதும் எங்கே அடிமைமுறை ஒழிக்கப்பட்டு விடுமோ என அஞ்சி நெஞ்சமழியலாயினார்கள். எனவே என்றும் அடிமை முறையிருக்கும் பொருட்டு அமெரிக்கக் குடியாட்சியிலிருந்து பிரிந்து வாழ எண்ணின அவ்வேழு மாநிலங்களும். எனவே அவைகள் "எபர்சன் டேவிசை”த் தலைவராக்கின. பின்பு தங்களுடைய பிரிவினைப் பிரகடனத்தை வெளியிட்டனர். சேதியறிந்த இலிங்கன் அடியுண்ட நாகம்போலச் சீறலானார்.

அமெரிக்காவின் ஒற்றுமையை எவரும் பிளக்க முடியாது. நாடு என்னை நம்பியுள்ளது. அதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/80&oldid=1096838" இலிருந்து மீள்விக்கப்பட்டது