பக்கம்:அறிவியற் சோலை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியற் சோலை _________ _ முழக்கம் , நமது உரிமைக்கும் விடுதலைக்கும் பாது காவல் எது ? பெரும்படையோ அன்று ; கப்பற் படையோ அன்று ; இவைகளால் கொடுங்கோலை ஒழிக்க முடியாது. நமது போராட்டத்திற்குக் காரணம் விடுதலை வேட்கையேதான். அந்த விடுதலை வித்தை நம் உள்ளத்தில் விதைத்தவர் இறைவனே. நாம் காக்க வேண்டியது விடுதலையை, மனித குலத்தின் பிறப் புரிமையை எழுமின் எழுமின் ” என முழங்கினர் இலிங்கன். போர்க்காலத்திலே ஆயிரக்கணக்கான அடிமை நீக்ரோக்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி விரைந்து வரத்தொடங்கினர். அவர்கட்கு இடமளிக்க 1862இல் ஓர் சட்டத்தை இலிங்கன் இயற்றினர். “அடிமைகளை ஆள்வோர் அடிமைகளுக்கு விடுதலை வழங்கி நட்டஈடு பெருக” என இலிங்கன் சொன்னர். இதனைத் தெற்கு எதிர்த்தது. எனினும் இலிங்கன் அச் சட்டத்தை நிறைவேற்றியே விட்டார். எனவே தெற்கு மிகவும் கடுமையாகப் போரிட்டது. செடர் மலைப்பிரதேசத்திலும், புல்ரன் என்ற இடத்திலும் நடந்த போர்களில் தெற்கு வெற்றி பெற்றது. மேலும் அப்படையினர் மேரிலாண்டை அடைந்தனர். - இலிங்கன் மிகவும் திடுக்கிட்டார்; ஒரு பெரும் இக் கட்டான நிலையிலே துன்புற்ருர். “கடவுள் விரும்பி ல்ை நாம் அடுத்த போரில் வெற்றி பெறுவோம்; நான் அடிமையுமல்ல ; ஆண்டையுமல்ல. இதுவே என் குடியரசு; குடியரசின் தத்துவம்” என்ருர் இலிங் கன். பின் செப்டம்பர் 17இல் ஆண்டியடம் என்ற இடத்தில் நடந்த கடும்போரில் இலிங்கன் வெற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/82&oldid=739322" இலிருந்து மீள்விக்கப்பட்டது