பக்கம்:அறிவியற் சோலை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை வீரன் 79 பெற்ருர். ஐந்து நாள் கழிந்து சுமார் 400 கோடி மக்களுக்கு விடுதலை தரும் அறிக்கை ஒன்றைத் தயாரித்தார் , 1-1-1863இல் அந்த அறிக்கையினை வெளியிட்டார் ; புத்தாண்டு விழாவிற் பேசுகையில் “ இச் சட்டம் ஒன்றே என் பெயரை வரலாற்றில் நிறுத்தும் ” எனினும் இன்னும் போர் முழுதும் ஓயவில்லை. பிரெடிரிச் பர்க், கார்செல்லேர்சி என்ற இரு இடங் களில் நடந்த கடும்போரில் வடக்கு மிகவும் பாதிக்கப் பட்டது. என்ருலும், கெட்டிச்பர்க், விக்ச்பர்க், என்ற இடங்களில் இலிங்கன் படைகள் வெற்றி பெற்றன, இக்காலை கெட்டிச்டர்க்கில் இலிங்கன் பேசிய பேச்சு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியது. என் ருர். போர்க்காலங்களில் இலிங்கன் செய்த பணிகள் பலப்பல. போர்க்களத்திலே பாசறையிலே இருப்பார். அவர்முன் அமெரிக்காவின் நிலப்படம் இருக்கும். அல்லும் எல்லும் அதனருகில் அமர்ந்துகொண்டு களத்திலே படை நிற்கும் நேரத்தை அறிவார் ; பின் அவைகளை எப்படி எப்படி நடத்துவது என்று திட்ட மிடுவார் ; அதன்பின் தளபதிகளோடு கலந்து படை கள் எந்தத்திசையில் செல்ல வேண்டும் , எப்படிப் போரிடவேண்டும் என்று ஆராய்ந்து முடிவு செய்வார்; அதன் பின்பு அடிக்கடி சமயமறிந்து படைத்தலைவர் களைச் செலுத்துவார். ஆனல் களத்திலே குதித்துப் போராடும் வீரர்களையும் அவர்களது வீட்டார்தம் நிலை யினையும் எண்ணி எண்ணி இதயம் உருகுவார். போர் நடக்கும்பொழுது ஏற்படும் கொலைகண்டு உளங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/83&oldid=739323" இலிருந்து மீள்விக்கப்பட்டது