பக்கம்:அறிவியற் சோலை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை வீரன் 8 | -

  • ഈ*ഈ*

'நாட்டின் தந்தையே இதோ மூன்று இலட்சம் வீரர்கள்” என நனவெலாம் உணர்வாய் நரம்பெல் லாம் இரும்பாய் வாழ்ந்த வீரர்கள் தினவெடுக்கும் தோள்தட்டிக் களம் சென்றனர். இந் நிலையில் 1864இல் இலிங்கன் மறுமுறையும் அமெரிக்க நாட்டுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865-ஆம் ஆண்டு சனவரி முதல் நாளன்று அமெரிக்கப்பேரவை கூடியது. இலிங்கன் எழுந்து நின்ருர். அவரது இருவிழிகளும் புத்தொளி பெற்று விளங்கின. முகம் பொலிவுடன் காட்சியளித்தது. இதயம் விம்மியது. நிமிர்ந்து நின்ருர் முடிவில் இலிங்கன். அன்று அகமும் முகமும் மலர ஏற்றமும் சீரிய தோற்றமும் கொண்டு மன்றத்திலே விளங் கினர். என்ன ? என்ன ? அன்று தான் அவர் பல ஆண்டுகளாகக் கண்டுவந்த கனவு நனவாக இருந் தது. உறக்கத்தைத் துறந்து உணவை மறந்து அல்லும் எல்லும் களமே கதியெனக் கிடந்து உழன்று இரத்த வெள்ளத்திலே நீந்திப் பலவாயிரம் மக்களைப் பலி கொடுத்ததின் பயனை அன்றுதான் அவர் அடையப் போகிருர். அஃதாவது அன்றை மன்றத் திலே புத்தாண்டின் தொடக்கத்திலே அடிமை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றினர் ; பல்லாயிரம் நீக்ரோ மக்களின் அடிமை விலங்குகளை ஒடிக்கும் விடுதலைச் சட்டத்தை நிறைவேற்றினர். இலிங்கன் கனல நனவாயிற்று. போர் முடிதல் எனினும் போர் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இந்நிலையில் 4-3-1865இல் ஒரு தொடக்க விழாச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/85&oldid=739325" இலிருந்து மீள்விக்கப்பட்டது