பக்கம்:அறிவியற் சோலை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை வீரன் t} J. போற்றியது. நீக்ரோக்களுக்கு விடுதலை வழங்கிய கடவுள் என ஏடுகள் புகழ்ந்தன. போர் முடிந்த பின்பு ஒரு நாள் இலிங்கன் ரிச்மொண்ட் என்ற தலைநகரி னுள் நுழைந்தார். அக்காலை ஒரு முதியவர் இலிங் கனைக் கண்டார். கதிர் கண்ட கமலம் போல அவர்தம் அகமும் முகமும் மலர்ந்தன. பின் தாய் கண்ட சேய் போல இலிங்கனிடம் ஓடினர். ' எந்தம் இறையே வாழ்க பல்லாண்டு ' என வாழ்த்தினர். பின்பு அடிகளில் வீழ்ந்து தழுவினர். அப்பொழுது அவரை நோக்கி ' என்னை வணங்காதீர்கள் விடுதலை நல்கிய இறைவனை வாழ்த்துங்கள், வணங்குங்கள் ” என்று பகை மறந்து பழகும் பண்பு இவ்வளவு அரும் பெருந் தொல்லைகளையும் போர்களையும் தென்னுடு விளைவித்தபோதிலும் வெற்றி பெற்றபின் தென்னுட்டின் மீது இலிங்கன் சினங்கொண்டாரா ? இல்லை ; மாருக அவர்கள் மீது அன்பே கொண்டார். அவர்கள் மீது கொண்டிருந்த பகை மறந்தார். தென்னுட்டு மக்கள், களத்திலே காட்டிய வீரத்தை-தீரத்தை ஏற்றிப் போற்றினர். ஒரு பொழுது தென்னகத் தளபதி சிடோன்வால் யாக்சன் என்பவரது படத்தைப் பார்த்தபோது ' இவரது முகம் இவரை ஒரு பெரு வீரராகவும் பெருங்குணமுடையவராகவும் எடுத்துரைக்கின்றது ” என்ருர், பெருங்குணமும் பேரறிவும் கொண்ட இலிங்கனிடம் மக்கள் தம் உள்ளத்தைப் பறிகொடுத் தனர். ' கடவுள் மனிதனிடம் அன்பு கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/87&oldid=739327" இலிருந்து மீள்விக்கப்பட்டது