பக்கம்:அறிவியற் சோலை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அறிவியற் சோலை _ _ _ வேண்டும், அதுபோல அவனையும் பிறரிடம் அன்புடை யனுக்க வேண்டும் ” என எண்ணிஞர். விடுதலை ஒளி அணைந்தது ஒரு நாள் அஃதாவது 14-4-1865 அன்று போர்க்களத்தை விட்டோடிய வீரனின் மரண தண் டனையை நீக்கினர். அதுவே இறுதியாக அவர் செய்த செயல். அன்று மாலை இலிங்கன் தன் மனைவியோடு “ வ்வோர்டு ” பேசும் பட நிலையத்திற்குப் பேசும்படம் பார்க்கச் சென்றிருந்தார். அன்று திரையிடப்பட்ட படம் " நமது அமெரிக்க மைத்துனர் ” என்பதாகும். படம் நடந்து கொண்டிருக்கிறது. நாட்டிலே இப்போது கேட்பது போர் முழக்கமல்ல ; விடுதலை வீரர்களின் வெற்றி முழக்கம். எங்கும் அமைதி , நாடே அமைதிக்கடலில் அடித்தளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரம். நேரம் 10 மணி, 19 நிமிடங்கள். மணி 10 மணி, 20 நிமிடமாயிற்று. அவ்வளவுதான், துப்பாக்கிக் குண்டு ஒன்று வெடித்தது. விடுதலை வீரன் இலிங்கன் சுருண்டு நாற்காலியிலிருந்து உருண்டு விழுந்தார். திருமதி இலிங்கன் கொலை கொலை ! ந்ாட்டுத் தலைவர் கொலை ” எனக் கத்தினர். உடனே கொலைஞன், பல்லாயிரம் நீக்ரோ நாட்டு மக்களின் அடிமை விலங்கை ஒடித்த விடுதலை வீரனை - விடுதலை ஒளியை அணைத்த அற்பன் வில்லியம் பூத், கதவினைத் திறந்து குதிரையின் கடிவாளத்தைப் பற்றத் தாவின்ை ; கீழே விழுந்தான். ஆல்ை மறுமுறை வெற்றி பெற்றுவிட்டான் ; குதிரையேறி மாயமாக மறைந்துவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/88&oldid=739328" இலிருந்து மீள்விக்கப்பட்டது