பக்கம்:அறிவியற் சோலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி வரலாறு 3 மொழி வளர்ச்சி இந்நிலவுலகில் இன்று இரண்டாயிரத்து எழு நூற்றுத் தொண்ணுாற்ருறு மொழிகள் பேசப்படு கின்றன. இவைகள் தவிர எண்ணிறந்த மொழித் திரிபுகளும் (dialects) காணப்படுகின்றன. ஆளுல் இவற்றுள் பண்பட்ட மொழிகள் எனப்படுவன ஒரு சிலவே. சிறப்புடைய சில பண்பட்ட மொழிகளைத் தெரிந்துகொள்வது, பெரிதும் பயன் அளிக்கும். அத்தகைய மொழிகளில் ஒரு சில பின் வருபவை 1 ஆங்கிலம் 2. பிரெஞ்சு 3. செர்மன் 4. சுபானிசு 5. போர்த்துகீசு 6. ருசிய மொழி 7. இத்தாலிய மொழி 8. சப்பானிய மொழி. இவ்வெட்டு மொழிகளும் இன்று இத் தரணியின் பெரும்பான்மையான பகுதிகளில் பேசப்படுகின்றன. இம் மொழிகளைத் தெரிந்த ஒருவன் உலக மக்கள் பலருடனும் உறவாட முடியும் ; உலகினைச் சுற்றி வரலாம். இத்துடன் அராபி, சீனம், மலாய், டச்சு மொழிகளையும் அறிந்து, வேறு சில மொழியினங்களைப் பொதுவாக அறிந்து கொண்டால் போலிச்சு, செக், சுவீடிச், டேனிச், பின்னிச், ஹங்கேரி ஆகிய மொழி களுக்கிடையே காணப் பெறும் வேற்றுமைகளையும் அறிந்துகொள்ளலாம். இவ்வளவில் ஒருவனது மொழிக் கல்வி ஒருவாறு முற்றுப் பெற்றதெனக் கூறலாம. முற்கூறிய இரண்டாயிரத்து எழுநூற்றுத் தொண்ணுாற்ருறு மொழிகளில், அமெரிக்க நாட்டுச் செவ்விந்திய மொழிகள் ஆயிரம் ; ஆப்பிரிக்க நீக்ரோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/9&oldid=739330" இலிருந்து மீள்விக்கப்பட்டது