பக்கம்:அறிவியற் சோலை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய சப்பான் பூவமைப்பு உலக அரங்கில் மேற்கு வல்லரசுகளுடன் போட்டியிடுமளவிற்குத் தொழில் துறையில் வெகு விரைவில் முன்னேறி, கீழை இங்கிலாந்து ' என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்கும் சப்பான் பசிபிக் கடலில் உள்ளது. தூரக் கிழக்கிலே சீரும் சிறப்பும் பெற்று விளங்கும் இந்நாடு ஒரு தீவுக் கூட்டமாகும். இக் கூட்டத்தில் ஹொக்கைடோ, ஹோன்ஷூ, ஷிகோகு, க்யூஷல் என்ற நான்கு பெருந் தீவுகள் அடங்கியுள்ளன. இந்நாட்டிற்கு மேற்கில் கொரிய தீபகற்பமும், தெற்கில் பர்மோசா, பிலிப்பைன்ஸ் தீவுகளும் உள்ளன. இரண்டாம் உலகப் போருக்கு முன் சப்பான் வல்லரசுடன் கொரிய தீபகற்பமும், குறில், ரியூக்யு, சகெய்லின் என்ற தீவுகளும் சேர்ந்திருந்தன. தற்பொழுது கொரிய தீபகற்பம் சப்பான் நாட்டிலிருந்து தனியே பிரிக்கப்பட்டு விட்டது. 1940-ஆம் ஆண்டில் எடுக்கப் பட்ட அரசாங்க நில அளவுக் கணக்குப்படி சப்பானின் பரப்பு 2,63,039 சதுர மைல்களாகும். அதாவது இன்றைய சப்பான் நாட்டின் பரப்பு பிரான்சு அல்லது கலிபோர்னியா நாட்டின் பரப்பைவிடச் சிறிது குறைவு. இந் நாட்டின் மேற்குக் கரையைச் சப்பான் கடலும், கிழக்குக் கரையைப் பசிபிக் கடலும் அணி செய்கின்றன. சப்பானைச் சூழ்ந்துள்ள இவ்விரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/90&oldid=739331" இலிருந்து மீள்விக்கப்பட்டது