பக்கம்:அறிவியற் சோலை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய சப்பான் 87 கடல்களில் பசிபிக் கடல் மிக ஆழமானது. எனினும் சப்பானின் இயற்கைத் துறைமுகங்களில் பல கிழக்கில் அமைந்திருக்கின்றன. இவ்விரு கடல் களையும், விமோனே சேகி, ஹயாமோ டோ, யூரா, நருடோ, என்ற நான்கு குறுகலான கால்வாய்கள் இணைப்பதோடு சப்பானின் நான்கு பெருந் தீவுகளை யும் பிரிக்கின்றன. இந்தக் கால்வாய்கள் குறுகி இருப் பதல்ை பசிபிக் கடலில் தோன்றும் பெரும் கடற் புயல்கள் சப்பானத் தாக்காமல் இருக் கின்றன. இந்நாட்டைச் சுற்றிலும் ஆழமான வளை குடாக்கள் இருக்கின்றன. இவற்றுள் டோக்கியோ, சகாமி, சுருகா, டோசா என்பவை முக்கியமானவை. மனிதனின் உடலில் இடுப்பினின்று மூளை வரை ஊடுருவிச் செல்லும் முதுகெலும்பு போலச் சப்பான் நாட்டின் இடை நிலத்தில் வடக்கிலிருந்து தெற் காகப் பெரியதொரு மலைத் தொடர் ஊர்ந்து செல்லு கிறது. இதனின்றும் கிழக்கிலும் மேற்கிலும் பல கிள்ைகள் பிரிந்து செல்லுகின்றன. புதுமணப் பெண்ணின் எழிலாடையில் ஒளி விடு தங்கச் சரிகை போன்று வளைந்து நெளிந்து செல்லும் இம் மலையின் படிகக் கற்பாறைகளின் இடையிடையே வளர்ந்து செழித்துக் குளிர் நிழல் பரப்பும் பசுமரங் கள் அள்ளி வீசும் இயற்கை அழகு கண் கொள் ளாக் காட்சியாகும். இமய மலையின் உயர்ந்த சிகரங் களைப் போன்று இம்மலைச் சிகரங்கள் பனியாடை போர்த்திருக்கவில்லை. இவற்றினிடையே பூமியின் சமதளத்திற்கும் ஆழமாக இருக்கும் கணவாய்களும் பள்ளத் தாக்குகளும் நில மடந்தையின் வதனத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/91&oldid=739332" இலிருந்து மீள்விக்கப்பட்டது