பக்கம்:அறிவியற் சோலை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- === SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSTTTT ST TTTST TTT TTTTTTTTS 88 அறிவியற் சோலை தோன்றி மறையாதிருக்கும் அம்மை வடுக்களைப் போல் காட்சி அளிக்கின்றன. குன்றுகளின் உச்சியி னின்று வீழ்ந்து பின்னர் சல சலத்தோடும் கானருவிகளும், அவற்றை யடுத்துச் செறிந்து வளர்ந்து பரிதியும் நுழையா வண்ணம் நிழல் காத்து நிற்கும் இளமாக் காக்களும், அதன்கண் வெண் னிலப் பட்டுடுத்தி விளங்கும் வான் குமரிக்கு மலர்சூட ஏங்கி நிற்பது போன்று பூங்கொத்துக்களே ஏந்தி நிற்கும் மலர்க் கொடிகளும், கொடிகளைச் சுற்றி இசை மிழற்றும் வண்டினங்களும், விண்ணகத்தைச் சூழ்ந்திருக்கும் கார்பயிற்றும் முழவிற்குப் பதம் பிடிக் கும் தோகை மயிலின் களி நடமும், பல்வேறு புள்ளி னங்களின் தீங்குரலும் சப்பானின் இயற்கை எழிலைப் பன்மடங்கு உயர்த்திக் காட்டுகின்றன. ஒருவன் வானுர்தியிலேறி நாட்டை வலம் வருவானேல் சப் பானின் இயற்கை வளம் அவனது கட்பொறி களுக்கு நல் விருந்தளிக்கும். சப்பானின் எழிலுக்கு ஊறு விளைவிப்பவை அங் குள்ள எரிமலைகள். அந் நாட்டில் கனல்கக்கும் எரி மலைகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. இத ஞல் அதற்கு ' எரிமலை நாடு ' என்ற ஒரு பெயரும் உண்டு. சப்பானிலுள்ள மலைகளுக் கெல்லாம் அரச கை விளங்குவது ப்யூஜி என்ற மலை. இஃது ஆறு சிகரங்களைக்கொண்டது. இஃது ஒவ்வொன்றும் சுமார் 9000 அடி உயரமுடையது. இஃது ஒரு மிகப் பெரிய எரிமலை ; இது கனல் கக்க ஆரம்பித்து விட்டால் ஈசன் தனது பகைவர்களை அழிக்க நெற்றிக்கண்னைத் திறந்து விட்டதைப் போல்தான். எரிமலைகளுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/92&oldid=739333" இலிருந்து மீள்விக்கப்பட்டது