பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1௦1

வருடைய இரத்தமும் ஒரு குறிப்பிட்ட இன்த்தைச் சேர்ந்ததாக இருக்கும். நோயுற்றவருக்கு தவறான இன இரத்தத்தைச் செலுத்தினால், அவரது உடல்நிலை மோசமடையும். ஏனெனில், ஓர் இனத்தைச் சேர்ந்த இரத்தமானது இன்னொரு இன இரத்தத்தின் உயிரணுக்களுடன் ஒட்டிக் கொண்டு, பின்னர் கரைந்துவிடும்

bloom : (உலோ.) புடமிடுதல் :

(1) தேனிரும்புத் தயாரிப்பில் இரும் புக் குழம்பு, ஒரு பிழிவு எந்திர்த்தினுள் செலுத்தப்பட்டு அல்லது ஒரு நீராவிச் சம்மட்டியால் அடிக்கப் பட்டு, அதில் படிந்திருக்கும் கசடுகள் நீக்கப்படுகின்றன. இதனைப் ‘புடமிடுதல்’ என்பர்

(2) கட்டுமானத்தில், ஒரு செங்கற் சுவரின் மேற்பரப்பின் மீதுள்ள பொலிவமைப்பு

(3) தொலைக்காட்சியில், படநுட்பங்களை மறைத்திடும் வகையில் படக்குழலில் தோன்றும் ஒளிப் பிரகாசம். இது ஒரு வெண்பகுதி துள்ளுகின்றபோது நிகழ்கின்றது

blower : (எந்.) காற்றோட்டமியக்கும் பொறி : இழுக்கப்படும் சுமையினை அதிகரிக்கப் பயன்படும் ஒரு சாதனம். இது காற்றோட்டம் ஏற்படுத்துவதற்காக அல்லது கடுங்காற்று உண்டாக்குவதற்காகப் பயன்படுகிறது

blow hole : (வார்.) உலோகக் குமிழி : வார்ப்படத்தில் அல்லது வாயு இருப்பதன் காரணமாக வார்ப்படத்தில் உண்டாகும் ஓர் உட்குழிவு

blow horn stake : (உலோ.) ஊது கொம்பு ஆதாரக் கம்பம் : உலோகத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஒரு கம்பம், இதில் ஒரு செங்குத்தான் கம்பத்தின் நுனியில் இருபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும் புயங்கள் அமைந்திருக்கும். இந்தப் புயங்களில் நீளமாகவும், நுனி நோக்கிச் சிறுத்ததாகவும், மற்றொன்று குறுகலாகவும் பட்டையாகவும் இருக்கும்

blowing : (மின்.) ஒளிமங்கள் : சமிக்கைச் செறிவு அதிகமாவதன் காரணமாக தொலைக்காட்சியில் படம் முனைப்பழிந்து படலமாகத் தெரிதல்

blowing : ஊதிவெடித்தல் : மிக விரைவாகச் சூடாக்குவதில் நீராவி உண்டாவதால் செய்கலம் வெடித்துச் சிதறிவிடுதல்

blow molding : (குழை.) ஊதுவார்ப்படம் : பிளாஸ்டிக் புட்டிகள், புழையுள்ள செய்கலன்கள் செய்வதற்கான ஒருமுறை. இதில், புறந்துருத்திய பிளாஸ்டிக் குழலினை அல்லது குமிழினைக் காற்றறை ஊதி ஒர் உலோக வார்ப்புப் படிவத்தின் குளிர்ச்சியான பரப்பில் பதியும்படி செய்து வார்ப்புப் படிவம் உருவாக்கப்படுகிறது

blown fuse : (தானி. எந்.) அவிந்த மின்காப்பு எரியிழை : எரிந்து போன மின்காப்பு எரியிழை

blowoff : (பொறி) ஊது உறிஞ்சி : ஒரு நீராவி அல்லது கொதிநீர் கொதிகலத்தில் இணைக்கப்பட்டுள்ள ஓர் ஒரதர் அல்லது வடிகால். இது கலத்தில் சேர்ந்துள்ள எண்ணெய், மசகு, கசடு ஆகியவற்றுடன் சேர்த்து நீரையும் நீராவி யையும் உறிஞ்சி வெளியே இழுப்பதற்குப் பயன்படுகிறது

blowout : (எந்.) வெடிப்பு : ஒரு சக்கரத்தின் டயரிலிருந்து காற்றினை உடனடியாக வெளியேற்றும் வகையில் ட்யரின் உட்குழாயி