பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

லும், வெளிப் பொதியுறையிலும் ஏற்படும் வெடிப்பு

blowout coils : (மின்.) வெடிப்புச் சுருள்கள் : ஒரு காந்த விசையின் வரிசைச் சுற்றிலுள்ள மின் காந்தச் சுருள்கள். இந்த விசையினால் இணைப்பினை ஏற்படுத்தும்போது, தொடர்புகளுக்கிடையிலான சுடரினை அணைக்கும் விதத்தில் காந்த அழுத்தம் உண்டாகிறது

błowout patch : (தானி.) புடைப்பு ஒட்டுப்பட்டை : ஒரு டயரின் பலவீனமான பகுதியை வலுப்படுத்துவதற்காக அந்தப் பகுதியில் கித்தான் அல்லது ரப்பர்த் துண்டினைச் செருகிக் காற்றடைத்துப் புடைக்கச் செய்தல்

blowpipe : ஊதுகுழல் : சூடாக்குதல், உருக்குதல் காய்ச்சுதல் ஆகிய வற்றுக்கான தீப்பிழம்பினை ஊதி விடுவதற்காக காற்று அல்லது வாயுவுைச் செலுத்துவதற்கான ஒரு குழல்

blowtorch : (பட்.) ஊது பந்தம் : குறிப்பிட்ட இடத்தில் தீவிரமாக வெப்பம் உண்டாக்குவதற்குரிய கையடக்கமான சாதனம். இதனைக் குழாய்-தொட்டி வேலை செய்வோரும், வண்ணம் பூசுவோரும் பயன்ப்டுத்துகின்றனர்

blow up : (அச்சு.) அச்சுப்பட விரிவாக்கம் : அச்சுப் படங்களைப் பெரிதாக்குதல்

blub : (குழை.) புடைப்பு : பிதுக்கம் அல்லது புடைப்பு

blue : நீலம் : மண்பாண்டங்களுக்கு மிகவும் உகந்த வண்ணம்: பச்சைக்கும் செங்கரு நீலத்திற்கும் இடைப்பட்ட ஒர் அடிப்படை வண்ணம்

blue annealing : (உலோ.) நீலப்பதனாக்கம் : கண்ணாடி, உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ, நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கடும் பதப்படுத்துதல்

blueprint : முதனிலைப் படிவம் : நீலத்தில் வெண்கோடாக உருப்படி வமுறும் ஒளிப்பட அச்சுப்படிவம். இந்த முறையை “முதனிலைப் படிவ அச்சடிப்பு" என்பர்

blue stain : நீலப் பூஞ்சணம் : பக்குவப்படுத்தப்படாத வெட்டு மரத்தில் ஒரு வகைக் காளானால் உண்டாகும் பூஞ்சணம். இதன் தோற்றம் அருவருக்கத்தக்கதாக இருப்பினும், வெட்டு மரத்தின் வலுவை இது பாதிப்பதில்லை

blue stone, blue vitriol, or copper sulphate : (வேதி.) மயில் துத்தம்/நீலக் கந்தகத் திராவகம் / செப்புக் கந்தகி : இது நீல நிறமுடையது; படிக வடிவிலுள்ளது; நச்சுத் தன்மையுடையது; திறந்த வெளிக்காற்றுப்பட பொடிப் பொடியாகக் கூடியது; நீர்த்த கந்தக அமிலத்தை தாமிர ஆக்சைடு மீது வினைபுரியச் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. பஞ்சாலைத் தொழில், மின்கலங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. பூச்சிக் கொல்லியாகவும் காளான் கொல்லியாகவும் பயன்படுகிறது

blunging machine : மண்பிசையும் பொறி : மண்பாண்டத் தொழிலுக்காகக் களிமண்ணையும் கற்பொடியையும் சக்கரப் பொறியில் சுழற்றி நீரில் பிசையும் எந்திரம்

blushing : (வண். அர.) கன்றுதல் : வெப்பமான, ஈரப்பதன் மிகுந்த நாட்களில் படச்சுருளின் மீதும் வெண்மையான அல்லது பழுப்பு மேகம் போல் படியும் ஒருவகை மேற்படிமானம். இது கரைப்பான்கள் துரிதமாக ஆவியாவதால் ஏற்படுகிறது