பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

தாள். இது கந்தல்கள், விலங்குத் தோல்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கடிதத் தாள்களுக்கும் இது பயன்படுகிறது

bond stone : ஊடுகள் : சுவரின் ஊடே நீண்டு செல்லும் கல்

bone black : (வேதி.) எலும்புக் கரி எச்சம் : மூடிய கலத்தில் வெப்பூட்டிக் கருக்கப்பட்ட எலும்பின் கரி எச்சம். வண்ணம் போக்கவும், சர்க்கரைக்கு மெருகேற்றவும், வண்ண நிறமியாகவும் பயன்படுத்தப்படுகிறது

bonet : (கம்.) மேல்மூடி : ஒர் ஒரதர் நூற்புக் கதிரின் வால் முனையை மூடி வைப்பதற்குப் பயன்படுகிறது

book binder’s wire : (அச்சு.) புத்தகம் கட்டுவோர் கம்பி : திறந்த உலையில் தயாரிக்கப்பட்டு ஈயம் பூசிய எஃகினாலான கம்பி. 18 முதல் 30 கடிகை அளவுகளில் உருண்டை வடிவிலும் 18X20 முதல் 25X32 கடிகை அளவுகளில் தட்டையான வடிவிலும் தயாரிக்கப்படுகிறது. 10 செ.மீ. கண்டுகளில் அல்லது காகிதக் கூம்புகளில் விற்கப்படுகிறது

book binding : புத்தகக் கட்டுமானம் : நூலின் பகுதிகளை ஒருங்கிணைத்து, அதன் மேல் உறையிட்டுக் கட்டுதல்

book paper : புத்தகக் காகிதம் : புத்தகங்களை அச்சிடுவதற்குப் பயன்படும் மெருகேற்றிய அல்லது மெருகேற்றாத காகிதம். இது அட்டை உறைகளுக்குப் பயன்படும் முரட்டுக் காகிதத்திலிருந்து வேறுபட்டது

boom : குறுக்கு விட்டம் : பாரங்களைத் தூக்கி ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்தில் வைப்பதற்குப் பயன்படும் பாரந்துக்கியின் நகரும் புயம்

boost : (வானூ.) மேலேற்றி : விமானத்தில் கடல் மட்டத்தில் எஞ்சினுள் சாதாரணமாகச் செலுத்தப்படும் காற்றின் அல்லது கலவையின் அளவைவிட அதிக அளவு உட்செலுத்தி மேலே ஏற்றுதல்

boost control automatic : (வானூ.) தானியங்கி மேலேற்றுக் கட்டுப்பாடு : மேலே ஏற்றும் அழுத்தத்தைத் தானாகவே முறைப்படுத்தும் அமைவு

booster : (மின்.) நிரவி : மின்னினியக்கம் செறிவுறுத்துவதற்கான ஒரு மின்னாக்கி. பொதுவாக ஒரு சேமக்கலம் ஒரு பகுதியாகவுள்ள ஒர் இணைப்பு முன்றயில் இது பயன்படுத்தப்படுகிறது. ஒரு மின் கலத்திற்கு மீண்டும் மின்னூட்டம் வேண்டியிருக்கும் ஒரு நிலையில் இந்த நிரவி பயன்படுத்தப்படுகிறது

booster brake : (தானி; எந்.) நிரவித் தடை : தடைக் கால்மிதியுடன் இணைக்கப்பட்டுள்ள, உட்கொள் பெருங்குழல் வெற்றிடத்திலிருந்து செயற்படும் ஒரு துணையான காற்று அறை. இது குறைவான கால் மிதி அழுத்தத்துடன் அதிகத் தடை விளைவினை உண்டாக்க உதவுகிறது

booster coil : (மின்.) நிரவிச் சுருள் : விமானம் புறப்படும்போது அதன் எஞ்சினின் சுடர்ச் செருகிக்கு நேரடியாக மின் விசையூட்டுவதற்குப் பயன்படும் ஒரு தூண்டு சுருள்

booster-glide vehicle : (விண்.) மின்னியக்கச் சறுக்கு ஊர்தி : ராக்கெட்டினால் உந்து செலுத்தப் படும் இறகுடைய ஊர்தி. இது வளியியக்கக் கட்டுப்பாட்டின்கீழ் வாயு மண்டலத்தை விட்டுச் சென்று மீண்டும் வாயுமண்டலத்திற்குள் திரும்பி வரக்கூடியது