பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1௦7

booster magneto : (வானூ.) நிரவி நிலைக் காந்தப் புலம் : கிளம்புவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு நிலைக் காந்தப் புலம்

booster pump : (தானி.) நிரவி இறைப்பான் : எரிபொருள் இறைப்பானுடன் ஒருங்கிணைவாக அமைக்கப்பட்டுள்ள ஒரு துணை இறைப்பான். உட்கொள் பெருங்குழல் வெற்றிடம் செயற்படாதிருக்கும் போது, காற்றுக் கவசம் போன்ற சாதனங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு இது வெற்றிடத்தை அளிக்கிறது

booster rocket : (வானூ.) நிரவி ஏவுகணை : ஒர் ஏவுகணையின் அல்லது பிற விண்வெளிக் கலத்தின் உந்துவிசையினை ஊக்கு விக்க உதவும் ஒர் ஏவுகணை உந்து

boost voltage : (மின்.) உந்து மின்னழுத்தம் : தொலைக்காட்சிப் பெட்டியில், ஒடுக்க மின்சுற்றுவழியில் உண்டாகும் கூடுதலான மின்னழுத்தம். இது உந்து கொண்மியில் சராசரி மின்னேற்றத்தைக் குறிக்கிறது

boot : புதையரணம் : தூசுக்கும் பருவ நிலைக்கும் எதிரான பாதுகாப்பாகப் பயன்படும் ஒரு புதையுறை

borax : (வேதி.) பொரிகம்/போரக்ஸ் : Na2B4C7 நீருடைய உவர் உப்புவகை. வெண்படிகக் கூட்டுப் பொருள். இயற்கையாகக் கிடைக்கிறது. நோய் நுண்மக் கொல்லியாகவும், இரும்பு-எஃகுக் கலவை பற்றவைப்புகளிலும் வெண்கலம், செம்பு உலோகங்களுக்குப் பித்தளை வண்ணமூட்டுவதற்கும் நீரை மென்மைப்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது

Borcher's metal : (உலோ.) போர்ஷர் உலோகம் : அமிலம் அரிக்காத, அரிமானமாகாத ஒரு பயனுள்ள உலோகக் கலவை. இதில் முதன்மையாகக் கலந்திருக்கும் அமைப்பான் குரோமியம்

border : அருகு : ஒருங்கிணைக்கப்பட்ட மேற்பூச்சு தோரணிகளின் புற விளிம்பு வடிவமைப்பு அச்சுக் கலையில், அச்செழுத்துக்களை உள்ளடக்கியுள்ள வரம்புக் கோடு அல்லது அலங்கார வேலைப்பாடு

bore : துளை : ஒரு குழாயின் நீள் உருளையின் அல்லது தண்டின் துவாரத்தின் உட்புழையின் குறுக்களவு. துளையிடுதல்மூலம் துவாரம் ஏற்படுத்த வேண்டும் என்பதை இது குறிக்கிறது

bore : (தானி.) நீள்துளை : ஓர் எஞ்சின் நீள் உருளையின் விட்டம்

boric acid : (வேதி.) போரிக் அமிலம் : பொறிகத்தை ஒர் அமிலத்துடன் வினைபுரிய வைத்துத் தயாரிக்கப்படும் ஒர் வேதியியற் கலவைப் பொருள் (H3BO3). இது நிறமற்ற படிக வடிவமுடையது. மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. மண்பாண்டத் தொழில், கண்ணாடித் தொழில்களில் பயன்படுகிறது

boring : (எந்.) துளையிடுதல் : மரம் அல்லது உலோகத்தில் வட்ட வடிவத் துளைகளையிடுதல்

boring bar : (எந்.) அகழ்வுத் தண்டு : வெட்டு முனையையுடைய ஒரு நீள் உருளைத் தண்டு. இது கடைசல் எந்திரங்களிலும் துரப்பன எந்திரங்களிலும், மற்றத் துளையிடும் சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது

boring machines : (எந்.) அகழ்வு எந்திரம் : நீள் உருளைகள், புடைப்புகள், படுகை வளையங்கள் போன்றவற்றைக் குடைவதற்குப் பயன்படும் எந்திரம்