a-battery : (மின்.) சேமிப்பு மின் கலத் தொகுதி : மின்கலத் தொகுதியால் இயங்கும் வானொலியில் உருகாது ஒளிவிடும் மின்குமிழ் இழைக்கு மின்விசை வழங்கும் ஆதாரம்.
ablation : (வானூ.) வெப்ப நீக்க உருகல் : ஒரு விண்வெளிக்கலம் மீண்டும் வாயுமண்டலத்திற்குள் நுழையும்போது, அதன் வெப்பக் கேடயத்திலுள்ள தனி வகை வெப்பச் சிதறல் பொருள்கள் உருகுதல்.
abomasum = (விலங்.) நான்காம் இரைப்பை : பசு போன்ற புல்லுண்ணி விலங்குகளுக்கு உள்ள நான்காம் இரைப்பை, இவற்றின் சீரணம் முக்கியமாக இதில்தான் நடைபெறுகிறது.
abortion : (உயி.) கருச்சிதைவு : முதிரா உருவமைந்த கரு, சூல் கொண்ட மூன்று மாதங்களுக்குள் சிதைதல்.
abrasion : உராய்வு : பொருள்களைக் கருவி கொண்டு வெட்டு வதற்குப்பதிலாக, உராய்பொருள் கொண்டு தேய்த்துக் குறைத்தல்.
abrasive : உராய்பொருள் : தேய்ப்பதற்கு அல்லது மெருகேற்று வதற்குப் பயன்படுத்தப்படும் மணற்கல், குருந்தக்கல், தோகைக் கல் போன்ற பொருள்கள். வைரம், குருந்தக்கல், குருந்தம், மணல், செம்மணிக்கல் தூள், படிகக்கல், தேய்ப்புபுக்கல், மெருகு மாக்கல் போன்றவை இயற்கை உராய் பொருள்கள். சிலிக்கன் கார்பைடு, அலுமினியம் ஆக்சைடு ஆகியவை செயற்கை உராய்பொருள்கள்.
abrasive paper : (உப்புத்தாள்) உராய்தாள் : சக்கிமுக்கிக்கல், செம் மணிக்கல், குருந்தக்கல், குருந்தம் போன்ற உராய்பொருள்கள் கோந்தினால் அல்லது வேறு ஒட்டுப்பசையினால் ஒட்டப்பட்டுள்ள காகிதம் அல்லது துணி.
abreaction : (உள. ) அக எதிரியக்கம் : மனநோயைக் குணப் படுத்துவதில் ஒரு செயல்முறை. இதில், மனநோயாளி தான் மறக்க முயலும் கசப்பான நினைவுகளை நினைவு கூர்ந்து அவற்றை நேரடியாக எதிர்நோக்கி அவற்றைத் துடைத்தழிக்கும்படி செய்கிறார்கள்.
abscess : (உட.) கழலை : உடலில் தோலுக்குக் கீழே பாக்டீரியாவால் உண்டாகும் சீழ்க்கட்டி.
abscissa : (கணி) மட்டாயம் (கிடையச்சுத்தூரம்) : ஒரு புள்ளியிருந்து நிலையச்சுக்குச் செங்குத்துக் கோணத்திலுள்ள நேர் தொலைவு.
absolute altitude : (வானூ.) முழுக் குத்து உயரம் : பூமிக்கு மேலே ஒரு விமானத்தின் செங்குத்து உயரம்
absolute motion : (இயற்) முழு இயக்கம் : விண்வெளியில்,நிலையானதொரு புள்ளியிலிருந்து