114
சலாகை. இதன் ஒரு முனையில் டங்க்ஸ்டனாலான தொடர்பு முனையும், மற்றொரு முனையில் இழை, பேக்கலைட், அல்லது இவைபோன்ற கடத்தாப் பொருள் கொண்டு பூசிய உருண்டையான திறப்பும் இருக்கும். இதில் ஒர் உலோக முனையிலிருந்து புயம் ஊசலாடுகிறது
breaker points : (தானி.) முறிப்பு முனைகள் : மின் முறிப்பானில் உள்ள உலோக இனைப்புத் தொடர்புகள்
breaker strip : (எந்.) இடையீட்டுப் பட்டை : ஒரு டயர் உறையின் பக்கச் சுவரிலுள்ள ஒரு கித்தான் பட்டை. இது தேய்மான்ப் பண்புகளை அதிகரிக்கிறது.
breaking joints : இடையீட்டு மூட்டிணைப்புகள் : மூட்டிணைப்புகளை ஊசலாடும்படி செய்தல், இது அவற்றை ஒரு நேர்க்கோட்டில் வருவதைத் தவிர்க்கும்
break iron : இடையீட்டு இரும்பு : ஒரு சமதள விசிப் பலகையின் மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள ஓர் இரும்பு. இது விசிப் பலகையினைத் திருக்கவும், பிளவுறுத்தவும் உதவுகிறது
break line : இடையீட்டுக் கோடு : அச்சுக்கலையில், ஒரு பத்தியின் கடைசி வரி
breaks : இடையீடுகள் : ஊசலாட்ட மூட்டிணைப்புகளுடன் கூடிய பட்டிகை அமைப்பு. இதில் எல்லா மூட்டிணைகளும் ஒன்றன் மேல் ஒன்றாக ஒரு செங்குத்துக் கோட்டில் அமைந்திருப்பதில்லை
breast drill : (பட்.) வெட்டுத் துரப்பணம் : உலோகத்தில் கையினால் துளைகளியிடுவதற்குப் பயன்படும் ஒரு சிறு எந்திரவியல் முறை. இதில் கையினால் திருப்பப்படும் ஒரு திருகு விட்டத்தின் குவட்டுத் துர்ப்பணத்திலிருந்து, சாய்வு இயக்கப் பல்லிணைப்புகள் வழியாகத் துரப்பண எந்திரத்திற்கு விசை செலுத்தப்படுகிறது
breast of a window : சன்னல் சாய் குவடு : உள்மாடத்தின் பின் புறமாகவும், பலகணி அடிக்கட்டையின் கைப்பிடிச் சுவராகவும் அமைந்த கட்டுமானம்
breast summer : (க.க.) உத்தரக் கட்டை : கட்டிட முகப்புத் தாங்கும் உத்தரக் கட்டை
breeder reactor : தொடர் வரிசை அணு உலை : ஒரே சமயத்தில் பிளவு படக்கூடிய பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு பிளவுபடாத பொருள்களை (யுரேனியம் தோரியம்) பிளவு படக்கூடிய பொருள்களாக மாற்றுகிற ஒர் அணு உலை. இதன்மூலம் பிளவு படக்கூடிய பொருள் அதிகமாகக் கிடைக்கிறது
Breguet spring : பிரகுவட் விற்சுருள் : ஒரு தனிவகையான கடிகாரச் சுருள்வில். இதில் புற்ச்சுருள் வளைந்து மற்றச் சுருள்களின் குறுக்கே மையத்திற் கொண்டு செல்லப்படுகிறது. சுருள்வில்லை முடுக்குவதன் மூலம் கடிகாரத்தை விரைவாகவோ தாமதமாகவோ ஒடச் செய்ய முடிகிறது
bre-vier : அச்சுருப்படிவ அளவு : இது 8-புள்ளி அளவு என அழைக்கப்படும் அச்செழுத்து
brick : செங்கல் : களிமண்ணால் செவ்வக வடிவில் வார்க்கப்பட்டு, சூளையில் எரித்துக் கடினமாக்கப்பட்ட பாளம். இது கட்டுமானத்திற்கும் தளம் பாவுவதற்கும் பயன்படுகிறது