பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10


அடுத்தடுத்து ஏற்படும் நிலை மாறுதல்கள்

absolute unit : (மின்) முதல் அலகு : மின்னோட்டம், மின்னழுத்தம் போன்ற மின்னியல் அலகு. இது சென்டிமீட்டர் - கிராம்-வினாடி முறை அடிப்படையில் அமைந்தது. நடைமுறை அலகு என்பது இந்த முதல் அலகின் மடங்கு

absolute zero (இயற்.) உறை வெப்பநிலை : ஒரு சென்டிகிரேடு வெப்பமானியில் 0°C என்பது நீர் உறையும் வெப்பநிலையாகும். ஆனால், பனிக்கட்டியில் சிறிது வெப்பம் இருக்கும்; அதாவது, நீரைவிடப் பனிக்கட்டி சற்று வெப்பமுடையதாக இருக்கும்.

மூலக்கூறுகளின் இயக்கத்தால் வெப்பம் உண்டாகிறது. மூலக் கூறுகளின் இயக்கம் ஒரு வெப்ப நிலையில் அடியோடு நின்றுவிடும். அந்த வெப்பநிலை -273.13°C என்று மதிப்பிடப்பட்டுள்ளது இந்த் வெப்பநிலையேயாகும்

absorbent : (குளி.) ஈர்க்கும் பொருள் : திரவத்தை அல்லது ஆவியை ஈர்த்துக்கொண்டு இயற்பியல் முறையிலோ வேதியியல் முறையிலோ உருமாறுதலடையும் ஒரு கூட்டுப் பொருள் அல்லது ஒரு பொருள்

absorptien dynamometer : (மின்.) ஈர்ப்புத் திருக்கை மானி : இது ஒருவகைத் திருக்கை மானி. இதில் அளவு ஆற்றலை உராய்வுத் தடை ஈர்த்துக் கொண்டு, வழக்கமான பணிகளைச் செய்வத்ற்கு மற்றப் பொறிகளுக்கு அனுப்பாமல் விட்டு விடுகிறது

absorption system : (குளி.) ஈர்ப்புச் சாதனம் : ஒரு குளிர்பதன அமைப்பிலுள்ள ஈர்ப்புச் சாதனம். இதில் ஆவியாக்கியிலிருந்து குளிர்பதன மூட்டும் பொருள் ஈர்த்துக்கொள்ளப்பட்டு, வெப்பம் அளிக்கப்படும்போது மின்னாக்கியில் வெளியிடப்படுகிறது

absorption wavemeter: (மின்.) ஈர்ப்பு அலை மானி : ஒர் ஒத்திசைவுச் சுற்று வழியை அதன் சுற்று வழியிலிருந்து உச்ச அளவு ஆற்றல் ஈர்த்துக் கொள்ளப்படும் வரையில் இசைவிப்புச் செய்வதன் மூலம் அலைவெண்ணையும் அலை நீளத்தையும் அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு மின் கருவி

abstract design : (கணி.) அருவவடிவமைப்பு : வடிவ கணிதக்கோடுகள், உருவங்கள் அடிப்படையிலான வடிவமைப்பு

abutment : (க.க; பொறி.) உதைவுக்கால் : ஒரு வில்வளைவு, தூலம், அல்லது பாலத்தைத் தாங்கி நிற்பதற்கு அண்டைக் கொடுத்து அமைக்கப்பட்டுள்ள உதைவுக்கால்

உதைவுக் கால்

acacine gum : வேலம்பிசின் : கருவேல மரப் பாலிலிருந்து கிடைக்கும் பிசின்

accelerated motion : (எந்.) முடுக்கு இயக்கம் : விரைவு வீதம் ஒரே அளவாக இல்லாதிருக்கிற இயக்கம். ஏறுமுக அல்லது இறங்கு முக விரைவு வீதத்தை இது குறிக்கிறது. இறங்குமுக விரைவு வீதத்தை 'எதிர் முடுக்கு இயக்கம்' என்றும் கூறுவர்

accelerating electrode : (மின்.) முடுக்கு மின்முனை : ஒர் எதிர்முனைக் கதிர்க்குழலிலுள்ள ஒரு மின் முனை, ஒளிக்கற்றையின் விரைவு வேகத்தை அதிகரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனை 'முடுக்கு மின்முனை'என்கின்றனர்.