பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
118

தடையினால் மின்னாற்றல் விசையில் இழப்பு ஏற்படுதல்

brush roeker : (மின்.) மின் பொறிக்கற்றை ஊசல் : ஒரு மின்னாக்கியின் அல்லது மின்னோடியின் மின்பொறிக்கற்றைப் பிடிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ள ஒரு சுழலும் ஊசல். இதன்மூலம் ஒரு திசைமாற்றியின் மின்பொறிக் கற்றைகளை வேண்டியவாறு பொருத்திக் கொள்ளலாம்

brush spring : (தானி. மின்.) மின் பொறிக்கற்றை விற்கருள் : இது தட்டையான அல்லது சுருளான ஓர் அழுத்துவிசை விற்கருள். ஒரு மின்னாக்கியின் அல்லது தொடக்க மின்னோடியின் மின்னகத்தின், அல்லது ஒரு வழங்கீட்டுச் சுழலியின் சுழலும் பகுதியுடன் இணைந்துள்ள ஒரு கார்பன் கலவை. மின் பொறிக்கற்றையைப் பற்றிக் கொள்ளும் வகையில், இது வடிவமைக்கப்பட்டிருக்கும்

brush wire : (மின்.) மின்பொறிக் கற்றைக் கம்பி : பெரும்பாலும் விறைப்பாக்கம் செய்யப்பட்ட உயர்ந்த அல்லது தாழ்ந்த கார்பன் எஃகுக் கம்பி. இதில் மென்மையானவை. 0805 செ.மீ முதல் .0190 செ.மீ அளவு உருண்டையாக இருக்கும். தட்டையானவை .381X.045 செ.மீ.முதல் .096X.033 செ.மீ. வரை அளவுடையனவாக இருக்கும்

B-stage resins : (குழை.) B, - நிலைப் பிசின்கள் : சூட்டினால் நிலையாக உருகிவிடும் தன்மையுடைய பிசின்க்ள் திரவமாக இருக்கும்போது, மென்மையாக இருக்கும் ஒரு நிலையில் இவை வினைபுரியும், ஆனால், முழுமையாக உருகிவிடவோ கரைந்துவிடவோ செய்யாது. வார்ப்படப் பொருள்களுக்கு இது பயன்படுகிறது

bubble : (குழை.) குமிழ் : புடை பெயரும் அல்லது ஒளி ஊடுருவும் குழைமத்தில் சிக்கியுள்ள ஒரு கோள வடிவ வெற்றிடம் அல்லது ஒரு காற்று உருண்டை அல்லது வாயு உருண்டை

bu-binga : (மர. வே.) பூ பிங்கா : பூமத்தியரேகை ஆஃப்ரிக்காவில் வாழும் ஒரு பெரிய மரம். இதன் வெட்டு மரம் கடினமானது; கனமானது; இளம் ஊதாப் பின்னணியில் கருஞ்சிவப்பு நிறக்கோடுகளைக் கொண்டது. தளவாடங்களிலும், அறை கலன்களிலும் விசித்திரமான செக்கர் நிறவிளைவை உண்டாக்கப் பயன்படுகிறது

buþonic blague : (நோயி.) அரையாப்பு வீக்கம் : அக்குள்கட்டு அல்லது அரையாப்பில் ஏற்படும் நெறிக்கட்டு அல்லது வீக்கம். இது எலி உண்ணிகளினால் பரவுகிற்து. நிணநீர்ச் சுரப்பிகள் வீங்குவதால் இந்நோயினால் பெரும்பாலும் மரணம் விளைகிறது

bubonocele : (நோயி.) இடுப்புவாதநோய் : வயிறும் இடுப்பும் சேருமிடத்தில் அண்டவாதம் ஏற்படுதல்

bucket trap : வாளிமூடி : வெப்ப மூட்டிகளிலிருந்தும் குழாய்களிலிருந்தும், நீராவி புகாதவாறு செறிவாக்கத்தையும் காற்றையும் அப்புறப்படுததும் ஒரு வகை ஒரதர். இந்த ஒரதருடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு வாளி, ஒரு வெளியேற்று குழாயை இயக்குகிறது

buck eye : (மர.வே.) மான் விழி மரம் : வழவழப்பான பழுப்பு வண்ணமுடைய கொட்டையுடைய அமெரிக்க நாட்டு மரம். இதனைக் 'குதிரைக்கால் படைப்பு' மரம் என்றும் கூறுவர். இந்த மரம் மென்மையானது. வெண்மை அல்லது இளம் மஞ்சள் நிறமுடையது. காகிதக் கூழ் மரச் சாமான்