பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
119

கள் செயற்கை உறுப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது

bucking bar : வளை தண்டு : தரையாணியைப் பொருத்தும் போது அதன் தலைக்கு எதிராக வைத்துப் பிடித்துக் கொள்ளப்படும் ஒரு தண்டு

buckled : வளைவுடைய : மடக்கிச் சுருக்கிய; வளைக்கப்பட்ட அல்லது உருக்கோணலாக்கிய

buckle plate : (பொறி.) திரிபுத்தகடு : அதிக வலிவும், விறைப்பும் அளிப்பதற்காக உட்குழிவாக்கிய அல்லது வளைத்து நெளிவாக்கிய ஒரு தகடு

buckling : (வண். அர.) வண்ண முறுக்கம் : எண்ணெயை ஓர் அடிப்படையாகக் கொண்ட ஒர் அடிப் பூச்சு வண்ணம் காய்வதற்கு முழு அவகாசம் அளிக்காதபோது, அதன் மீதான பிராக்கிலின் மெருகு சுருங்குவதால் உண்டாகும் விளைவு

buckling coil : (மின்.) கூன் கம்பிச்சுருள் : ஒலிபெருக்கியில் முதன் மைக்கம்பிச் சுருளின் காந்தப் புலங்களுக்கு எதிரான காந்தப் புலங்களை உண்டாக்கக்கூடிய ஒரு வகைக் கம்பிச் சுருள்

buckram : முரட்டுத் துணி : கஞ்சி அல்லது பசை ஊட்டப்பட்ட விறைப்பான முரட்டுத் துணி. இது புத்தகங்களைக் கட்டுமானம் செய்யப் பயன்படுகிறது

buckskin : மான் தோல் : மான் வகையின் தோல். இது மென்மையானது; பழுப்பு மஞ்சள் நிற முடையது

buff : (எந்.) தோல் சக்கரம் : தோல் போர்த்த ஒரு சக்கரம். உலோகப் பரப்புகளுக்கு மெருகேற்றுவதற்குப் பயன்படும் ஒரு சாணைக் கருவி. இதன் சாணைச் சக்கரத்தில் பல மென்தோல் வட்டத் தகடுகள் இணைக்கப்பட்டிக்கும்

buffer : (மின்.) உதைதாங்கு மின்காப்பு : பெருக்கம் செய்யப் பட்ட ஒரு மின் காப்பு. இதில் அடுக்கு வரிசைகளிடையே எதிரெதிர் வினை ஏற்படுவதைத் தடுப்பதற்காக ஒர் எலெக்ட்ரான் குழல்வரிசை அமைக்கப்பட்டிருக்கும்

buffet : சிற்றுண்டிப் பலகை : இது ஒரு ஃபிரெஞ்சுச் சொல். இது சிற்றுண்டிகளை வைப்பதற்குப் பயன்படும் நிலையறைப் பெட்டியை அல்லது பக்கப் பலகையைக் குறிக்கிறது

buffeting : (வானூ.) அலைமோதல் : சீரற்ற ஒழுகியக்கம், காற்றுவீச்சு காரணமாக விமானத்தின் கட்டுமானத்தில் அல்லது மேற்பரப்பில் ஏற்படும் அலைக் கழிப்பு. கொந்தளிப்பான காற்று வீச்சினால் ஏற்படும் விமானத்தின் ஒழுங்கற்ற அசைவையும் ஊசலாட்டத்தையும் குறிக்கும்

buffing : முரட்டுத்தோல் : இது பதனிட்ட மெத்தென்ற முரட்டு வெண் தோலினைக் குறிக்கும். உலோக எந்திரங்களை இவ்வகைத் தோலினால் தேய்த்து மெருகிடு வதையும் குறிக்கும்

buffing leather : உள்வரித் தோல் : உரித்த தோலைவிட வலுவாக இருக்கக்கூடிய மென்மையான தோல். இது பெரிய பொருள்களுக்கு உள்வரியிடுவதற்குப் பயன்படுகிறது

buffing wheels : (பட்.) சாணைச் சக்கரம் : மெருகேற்றுவதற்குப் பயன்படும் சாணைச் சக்கரம். இது பஞ்சு அல்லது கம்பளித் துணியாலான பல வட்டத்தகடுகளைக் கொண்டிருக்கும். இதில் சானைப் பொடிகள், உராய்பொருள்கள் இருக்கும்