பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
120

bug : (மின்.) விரைவுச் செய்திச் சாதனம் : குறியீட்டு முறையில் செய்திகளை அனுப்புவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒர் அதிவேகப் பகுதித் தானியங்கிச் சாதனம்

buhl work : ஆமையோட்டில் வேலைப்பாடு : ஆமையோட்டில் பல் வண்ணப் பொன், வெள்ளி, தந்த உலோக வேலைப்பாட்டுடன் கூடிய உட்செதுக்கிய வேலைப்பாடு

buhrstone : படிகக்கல் : திரிகையாகப் பயன்படும் ஒருவகைப் படிகக்கல். சொரசொர்ப்பான இந்தப் படிகக்கல் மணிகளைத் தேய்த்துப் பொடியாக்குவதற்குப் பயன்படுகிறது. இது எந்திரக் கல் போன்றது

builders tape : அளவை நாடா : நெகிழ்வுடைய உலோகம் அல்லது துணிப்பட்டையிலான அளக்கும் நாடா. இது வட்டவடிவ உறையில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். இது பொதுவாக 127 முதல் 254 செ.மீ. நீளமுடையதாக இருக்கும். இதனைக்கட்டிடக் கலைஞர்கள் பயன்படுத்துவார்கள்

building : கட்டிடக்கலை : கட்டுமானப் பொருள்களைக் கொண்டு ஒரு கட்டிடத்தை எழுப்பும் கலை

building line : கட்டிட வரம்புக் கோடு : ஒரு கட்டிடச் சுவரின் புற முகப்பு எல்லைக் கோடு. சட்டப் படி எந்த வரம்புக்கு அப்பால், கட்டிடம் நீட்டிக் கொண்டிருக்கலாகாதெனத் தடைசெய்யப்பட்டிருக்கிறதோ அந்த வரம்புக்கோடு

building materials : (க.க.) கட்டுமானப் பொருள்கள் : கட்டிடம் கட்டுவதற்குப் பயன்படும் பொருள்கள் அனைத்தையும் குறிக்கும்

building paper : (க.க.) கட்டிடக் காப்புக் காகிதம் : பருவ நிலையின் பாதிப்பிலிருந்து சுவர்களையும் மேல் முகடுகளையும் பாதுகாப்பதற்கு மேற்கவசமிடுவதற்குப் பயன்படும் கனமான காகிதம்

building stone : (க.க.) கட்டுமானக் கல் : கட்டிடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் எல்லா வகை கற்களையும் குறிக்கும். பளிங்குக் கல், கருங்கல், மாககல், சுண்ணாம்புக்கல் முதலியவை இதில் அடங்கும்

building up : (மின்.) மின்னழுத்தப்பெருக்கம் : மின்னகத்தின் தற் கிளர்ச்சி காரணமாகத் தொடக்க நிலையிலிருந்து இறுதி மின்னழுத்தம் வரையில் ஒரு மின்னாக்கியில் உண்டாகும் தீவிர மின்னழுத்த ஆக்கம். முதல் நிலை மின்னழுத்ததம், எஞ்சிய காந்த ஆற்றலால் உண்டாகிறது, இந்த மின்னழுத்தம் காந்தப் புலங்களுக்குப் பரவும் போது, அந்தப் புலங்கள் வலுவடைந்து முழுமையான மின்னழுத்தம் உண்டாக உதவுகின்றன

built up member : (பொறி.) கட்டுமானத் தொகுதி : சிறிது சிறிதாகக் கட்டியமைத்த கட்டுமானத் தொகுதி. இந்தக் கட்டுமான முறையை டச்சுக்காரர்கள் புகுத்தினர்

bulbar : பின்மூளைக் குமிழ்முனை : பின் மூளையின் புடைத்த பகுதி. மூளையின் கீழ்ப் பகுதியான இது முதுகந்தண்டு வடத்துடன் இணைந்திருக்கும்

bulk : பருமன் : சாதாரணமாகக் காகிதத்தின் கனத்தைக் குறிக்கும் சொல். ஒரு பொருளின் எடைக் கேற்ப அதன் கனத்தைக் குறிக்கவும் இது பயன்படுகிறது

bulk factor : (குழை.) பருமக்காரணி : அடர்த்தியற்ற வார்ப் படத்தூளின் கன அளவுக்கும் இறுதியாக உருவாகும் பொருளின்