பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
122

மாறுதல் காரணமாக விமானத்தில் ஏற்படும் திடீர் உந்தல் அல்லது குலுக்கம்

bumper : (தானி; எந்.) முட்டுத் தாங்கி : உந்து வண்டிகளின் முன்னும் பின்னும் மோதலைத் தாங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள முட்டுத் தாங்கி

bumper bag : (வானூ.) முட்டுத் தாங்குங் திண்டு : விமானம் தரை யிறங்கும்போது அதன் அடிப் பகுதிக்குச் சேதம் ஏற்படாதவாறு தடுக்கக்கூடிய ஒருவகைத் திண்டு

bumper blocks : (தானி. எந்.) முட்டுத்தாங்கு பாளங்கள் : கடும் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்வதற்காக உந்து வண்டியின் அச்சுகளுக்கும் சட்டகத்திற்குமிடையே வைக்கப்பட்டுள்ள ரப்பர்ப் பாளங்கள்

bumping hammer : (உலோ.) முட்டுச் சம்மட்டி : கழிவுப்பொருள் கொள்கலன்கள் போன்ற பெரிய கலன்களில் மூட்டுவாய்களை மூடுவதற்குப் பயன்படும் ஒருவகைச் சம்மட்டி

bunching : (மின்.) விரைவு வேக மாற்றம் : ஒர் எலெக்ட்ரான் கதிர்க் கற்றையின் விரைவு வேக ஏற்றத் தாழ்வு காரணமாக எலெட்ரான் அனுப்புகை நேரத்தில் உண்டாகும் வேறுபாட்டினால் ஒரு மாற்று மின்னோட்டக் கூறு உண்டாதல்

bundling machine : (அச்சு.) முடுக்குக் கருவி : அச்சு முழுமடித் தாள் வரிசை, கைப்பிடி நிலை மாட்டி முதலியவற்றை நெருக்கி அழுத்தி முடுக்குவதற்குப் பயன்படும் ஒரு பற்றுக் கருவி

bun foot : குட்டை வட்டக்கால் : குட்டையாகவும் வட்டமாகவும் அமைந்த தட்டையான பந்து வடிவக் கால்

bung : அடைப்பான் : செங்கற் சூளையிலுள்ள சுடுசெங்கல் களி மண் பெட்டிகள்

bungalow : (க.க.) ஒற்றைமாடி இல்லம் : சுற்றுத் தாழ்வாரத்தோடு கூடிய ஒரடுக்கு வீடு

bunker : (பொறி.) எரிபொருள் அறை : எரிபொருள், பெரும்பாலும் நிலக்கரி சேமித்து வைக்கப் பட்டிருக்கும் அறை

Bunsen burner : புன்சென் வாயு அடுப்பு : ஆய்வுத் கூடங்களில் பயன் படுத்தப்படும். ஒருவகை வாயு அடுப்பு. இதில் வாயுவும், காற்றும் கலந்த ஒரு கலவை எரிபொருளாகப் பயன்படுகிறது

பன்சென் வாயு அடுப்பு

buoyancy : மிதப்பாற்றல் : நீர்மத்துள் அழுத்துவதால் எடை குறைவாகக் கானும் இயல்பு, பொருளின் எடையால் வெளியேற்றப்படும் காற்றின் எடைக்குச்சமமானதாக மேலழுந்தும் விசை அமைந்திருக்கும்

burette : (வேதி.) வடியளவைக் குழாய் : சிறுநிற நீர்மம் அளக்கும் கண்ணாடி அளவைக் குழாய். இதன்மூலம் ஒரே சமயததில் ஒரு கரைசலில் மிகச் சிறிய அளவைக் கூட எடுக்கலாம்

burl : (மர. வே.) மரக்கரணை :

(1) ஒரு மரத்தின் தூர்ப்பகுதியில் அளவுக்கு மீறிய காரணமாக உண்டாகியிருக்கும் கரணை

(2) அலங்காரத் 'திரைச் சீலை' களிலுள்ள அழகிய நூல் வேலைப்பாடு

burlap : பருக்கன் துணி : சணலில் நெய்யப்பெற்ற கரடுமுரடான துணி. இது திரைச்சீலைகள், சிப்பங்கட்டும் துணிகள் முதலியன தயாரிக்கப் பயன்படுகிறது