பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
124

தற்குரிய உருளை வடிவ உலோகக் கட்டை. இது தாங்கிபோல் பயன்படும்

(1) பொதுவாக, உள்வரி விட்டத்தைக் குறைப்பதற்காகப் பயன் படுத்தப்படும் உலோகத் துண்டு

busheled iron : (உலோ.) கலவை உலோகம் : கூட்டுக் கலவை செய்யும் ஊதுலையில் இரும்புத் துண்டுகளிலிருந்து தயாரிக்கும் வகை இரும்பு

bushing : (எந்.) செருகு குழல் : துல்லியமான சரியமைவுக்கும் பழுது பார்த்தலுக்கும் ஒரு தாங்கி இடமளிப்பதற்குப் பயன்படும் கம்பியுருளை அகஞ்செருகப்பட்ட குழல்

butt : (மர; வே.) மூட்டு வாய் : பொதுவாக, கதவின் மூட்டுவாய்: இது வார்க்கட்டை முட்டு வாயைக் குறிக்காது

butterfly table : சிறகு வடிவமேசை : வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளைப் போல் இரு புறமும் மடித்திடக்கூடிய வகையில் அமைந்த மேசை

butterfly valve : (தானி; எந்.) சிறகு வடிவ ஓரதர் : நடுவிலுள்ள ஒர் ஆதாரத்தில் இரு புறமும் மடிந்து விரிந்திடக்கூடிய வகையில் அமைந்த ஒரதர்

buttering : (க.க.) சாந்துக் கலவை பூசுதல் : கட்டுமானத்திற்கு செங்கல்லை அதன் நிலையில் வைப்பதற்கு முன்னர் அதன் விளிம்புகளில் சாந்துக் கலவையினைப் பூசுதல்

buttering trowel : (க.க.) சாந்து சட்டுவக் கரண்டி : சாந்து பூசுவதற்குப் பயன்படும் சட்டுவக் கரண்டி

butternut : (மர. வே.) வெண்மரம் : இது எண்ணைய்ப் பசையுடைய கொட்டை தரும் ஒரு வகை மரம். இது அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் காணப்படுகிறது. நடுத்தர வடிவளவுடையது. இதன் வெட்டுமரம் மென்மையானது; மென்சாயல் நிறமுடையது; நுண்துவாரங்கள் கொண்டது. அறைகலன்கள் செய்யவும், உள்முக அலங்கார வேலைப்பாடுகளுக்கும் பயன்படுகிறது

butt hinge : (மர. வே.) மூட்டுவாய்க் கீல் : ஒரு கதவின் விளிம்புடன் பொருத்தப்பட்ட ஒரு கீல். இதில் குடியிருக்கும்போது கதவின் பக்க நிலைக்கதவின் விளிம்புடன் பொருந்தியிருக்கும். இது வார்க் கட்டைக்கீலிருந்து வேறுபட்டது

butting or butt ramming : (வார்.) இடித்து இறுக்குதல் அல்லது திமிசு அடித்து இறுக்குதல் : ஒரு திமிசுக் கட்டையின் உருண்ட முனையின் தட்டையான மேற்பரப்பை இடித்து அல்லது திமிசு அடித்து இறக்குதல்

butt joint : (க.க; மரவே.) முளை மூட்டு : இரு வெட்டு மரத் துண்டுகள் ஒன்றன் மேல் ஒன்று மேவாதவாறு விளிம்புகளை இணைத்தல்

முளை மூட்டு

button machine : குமிழ்ப் பொறியமைவு : ஒரு சிறிய, கையால் இயக்கக்கூடிய சாதனம். பொத்தான்களைப் பொருத்துவதற்கும் கொளுவிகளையும் கயிற்றுத்துளைகளையும் இணைப்பதற்கும் பயன்படுகிறது