பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11

accelerating jet : (தானி.எந்.) முடுக்கத் தாரை: உட்புகும் காற்று விசையினுள் முடுக்க விசையினை உட்செலுத்துவதற்கு வாயிலாகப்பயன்படும் எரி-வளி கலப்பித் தாரை(carburetor jet).

accelerating pump: (தானி.எந்.)முடுக்க இறைப்பி :கலவையின் செறிவினை அதிகரித்து, பளுவேற்றிய ஊர்தியினை விரைவாகக் கிளப்புவதற்கு (pickup) உதவும் நோக்கத்திற்காக எரி-வளி கலப்பியுடன் இணைக்கப்பட்டுள்ளதும் பாய்ந்திடும் வகையைச் சேர்ந்ததுமான இறைப்பி (pump)

accelerating - pump piston : (தானி. எந்.) முடுக்க இறைப்பி உந்து தண்டு : முடுக்க இறைப்பிமுசலகம் முடுக்க இறைப்பியிலுள்ள நீள் உருளையிலிருக்கும் (cylinder) தோலினாலான சிறிய கிண்ணம் போன்ற வளையம் (washer) அல்லது புழையுள்ள உள்ளீடற்ற பித்தளை உந்து தண்டு

acceleration : (எந்.) முடுக்கம்: ஊக்குவிசை: ஒர் இயங்கும் பொருளின் வேக வளர்ச்சி வீதம்

accelerator : (தானி. எந்.) முடுக்கி: (1) வழக்கமாகக் காலால் இயக்கப்படும் எந்திரத்தினுள்பொறியினுள் (engine) செலுத்தப்படும் வாயுக் கலவையின் அளவினை முறைப்படுத்துவதற்கான ஒர் எந்திர்வியல் சாதனம் (2) குழைமவியலில்(plastic) குறிப்பாகப் பிசின் (resin) உறைவதை விரைவுபடுத்தும் வினையினைத் துரிதமாக்கும் ஒரு வேதியியற் பொருள். 'ஊக்கி' என்றும் அழைக்கப்பெறும்

accelerator - pump system : (தானி.) முடுக்கி இறைப்பு முறை : உள்வெப்பாலையில் எரிபொருளாவியோடு காற்றைக் கலக்கச் செய்யும் அமைவில்(carburetor) உள்ள ஒர் இறைப்பி. இது காற்று எரி பொருள் கலவையை எந்திரத்தினுள் செலுத்தி ஒரு விரைவான வேகம் பெறச் செய்கிறது

accelerometer: (வானூ.)முடுக்க மானி; முடுக்களவி : முடுக்கங்களைப் பதிவு செய்வதற்கான, அளவிடுவதற்கான அல்லது சுட்டிக் காட்டுவதற்கான (indicator) ஒரு கருவி

accelerometer:(மின்னி.)முடுக்க மானி: முடுக்கத்தை அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி

accent : (கணி.) மின் அழுத்தக் குறியீடு: பகா எண்ணைக் (prime) குறிக்கும் 'a' போன்ற, ஒரே மாதிரியான குறியீடுகளின் வரிசையின்ன (order) அல்லது மதிப்பினை (value) வேறுபடுத்திக் காட்டுவதற்கான குறியீடு அல்லது குறியீடுகள்

acceptor circuit : (மின்.)ஏற்புச் சுற்றுவழி : ஒரு மின் சுற்றுவழியில் (குறிப்பாக வானொலியில்) ஒரு கொண்மியும், ஒரு மின்கம்பிச் சுருளும் இருக்கும். இந்த மின் சுற்றுவழியில் மின்விசை பாயத் தொடங்கியதும், அது மின்சுற்று வழியைச் சுற்றி முன்னும் பின்னுமாகப் பாயும். கொண்மி, கம்பிச் சுருள் இரண்டின்வடிவளவுகளைப் பொறுத்து, இந்த ஊசலாட்டத்தின் அலைவெண் அமையும்.இது சுற்றுவழியின் அலைவெண்ணை இயல்பான அளவுக்கு வைத்திருக் கும். ஆதார அலைவெண் சுற்று வழியின் இயல்பான அலைவெண்களுக்குச் சமமாக இருப்பின் பெருமளவு மின்னோட்டம் பாய்கிறது. அந்தக் குறிப்பிட்ட அலைவெண்களுக்கு அந்தச் சுற்றுவழி ஏற்புச் சுற்றுவழியாக அமைகிறது. நாம் வானொலியைத் திருப்பும்போது: அதனை ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான அலைவெண்ணுக்குரிய ஏற்