பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
128

டப்பட்ட கயிற்றுச் சுருள்களைப் போன்றிருக்கும் ஒரு திருக்கு வடிவம்

cabling : (க.க.) மணிவட வார்ப்புரு : தூண் முதலியவற்றில் செதுக்கப்படும் செங்குத்தான வரிப் பள்ளம்

தூணின் செவ்வுயரக் குழு வினைக் கம்பி வார்ப்புருவால் நிரப்பும் அணி அமைப்பு

cabochon : உருள்மட்டை வடிவு : முகடு உருண்டையாகவும் அடி தட்டையாகவும் இருக்குமாறு ஒரு பணிக்கல்லின் தோற்றத்துட்ன் செதுக்கு வேலைப்பாடு செய்யப் பட்ட ஒரு வட்டவடிவப் பரப்பு

cabriole : (மர.வே.) வளைகால் : தட்டுமுட்டுப் பொருள்களில், முழங்கால்பகுதி குழிவாகவும் கணுக்கால் பகுதி உட்குழிவாகவும் அமைக்கப்படும் ஒருவகை வளைகால் பாணி

cadmium : (வேதி.) காட்மியம் : தகரம் போன்ற வெண்ணில உலோகத் தனிமம் (Cd), துத்தநாகக் கனிமங்களில் சிறிதளவு கிடைக்கிறது. அதிலிருந்து வடித்துப் பிரித்தல் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. உருக்கி உலோகக் கலவைகள் செய்யப்பயன்படுகிறது

cadmium lithopone : (வன்.) காட்மியம் வண்ணப் பாளம் : மஞ்சளும் சிவப்பும் வரிசையாக அமைந்த காட்மிய உலோகப் பாளம். இது ஒளியால் சேதமடையாது காரங்களை எதிர்க்கக் கூடியது

cadmium plating : (உலோ.) காட்மிய முலாமிடல் : இரும்புப் பொருள்களுக்கும், மற்றப் பகுதிகளுக்கும் அரிமானத்திலிருந்து பாதுகாப்பதற்காக மின்பகுப்பு முறை மூலமாக காட்மிய முலாமிடுதல்

cadmium silver : (தானி.எந்.) காட்மிய வெள்ளி : தாங்கிகள் தயாரிப்பதற்குப் பயன்படும் ஒர் உலோகக் கலவை. தகரம்-செம்பு-அஞ்சனம் கலந்த பப்பிட் உலோகம் என்னும் உலோகக் கலவையை விட இது அதிகப் பளு அழுத்தத்திலும் அதிவெப்ப நிலையிலும் எளிதாகக் செயற்படவல்லது

caduceus : கட்டியக் கோல் : கிரேக்கத் தெய்வங்களின் துதரான ஹெர்மிசின் கையிலுள்ள கட்டியக் கோல். இது பாழ்ப்போல் நெளிந்திருக்கும். இதில் இறகும் இருக்கும். இது அலங்காரப் பொருளாகப் பயன்படுகிறது

Caecum : (உட.) பெருங்குடல் வாய் : பெருங்குடலின் முற்பகுதி இங்குதான் சிறுகுடல் இதனுள் நுழைகிறது. பெருங்குடல் வாயின் பக்கத்திலிருந்து குடல் முளை வெளியே வருகிறது

பெருங்குடல்

cage-type valve : (தானி.எந்.) கூண்டு வகை ஒரதர் : முகப்பு உந்துகளில் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை ஒரதர். இதில் தலைக் தொண்டை வடிவிமுள்ள ஓர் ஒரதர், ஒரு நீள் உருளைததண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய உருளையினுள் அல்லது கூண்டினுள் இயங்கிக் கொண்டிருக்கும். இந்த ஒரதரையும் கூண்டையும் தனி அலகாக அகற்றிவிடலாம்.

cairo : (அச்சு.) கெய்ரோ அச் செழுத்து : வரி உருக்கச்சுப் பொறியிலிருந்து கிடைக்கும் ஒருவகை அச்செழுத்து முகப்பு

caisson : நீர்புகாப் பெரும் பேழை : நீரின் கீழ் அடித்தளம் அமைக்க உதவும் நீர்புகாத பெரும் பேழை. நீருக்கடியில் பர்லங்களுக்கு அடித்தளங்கள் அமைக்க இது பயன்படுகிறது