பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
131


calking : நீர்க்காப்பு : நார்க் கயிறு உருகிய நிலக்கீல் போன்றவற் றைக் கொண்டு பலகைகளின் சந்திப்பு இடைவெளியை அடைத்து நீர் உட்புகாமல் செய்தல். மரக்கலங்களில் பலகை மூட்டுக்களை நீர்க் காப்புடையதாகச் செய்ய இது பயன்படுகிறது

calking tool : நீர்க்காப்புக் கருவி : சந்துகளை அடைத்து நீர் உட் புகாமல் செய்வதற்குப் பயன்படும் கருவி

calorie : (வேதி; பொறி, எந்: இயற்.) கலோரி / கனலி : வெப்ப அளவைக்கூறு, கனலி. ஒரு கிராம் நீரின் வெப்ப நிலையை ஒரு சென்டிகிரேடு அளவுக்கு உயர்த்துவதற்குப் பயன்படும் வெப்பத்தின் அளவு

calorific value : (தானி.) வெப்ப ஆளவு : உணவு அல்லது எரிபொருள் தரும் வெப்பத்தின் அளவு

calorimeter : கனல்மானி : சூட்டின் அளவு காட்டும் கருவி. ஒரு மின்கடத்தியிலுள்ள மின்னேர்ட்டத்தினால் உண்டாகும் வெப்பத்தை அளவிடுவதற்கான கருவி. உராய்வு, உள்ளெரிதல், வேதியியல் மாற்றம் போன்றவற்றால் உண்டாகும் வெப்பத்தை அளவிடும் கருவி

calorizing : (உலோ.) கனல் முலாமிடல் : இரும்பு, எஃகு போன்றவற்றிற்கு அலுமினியம் அல்லது அலு மினிய-இரும்பு உலோகக் கலவைகளால் முலாமிடும் முறை

cam : (எந்.) எந்திர முனைப்பு : இயக்கும் சக்கரத்தின் சுற்று வட்டம். கடந்த முனைப்புச் சாதனம். இது சுழல் இயக்கத்தை மாற்று, எதிர்மாற்று அல்லது முன்பின் இயக்கமாக மாற்றக்கூடிய ஒரு சுழல் தண்டில் பொருத்தப்பட்டிருக்கும்

எந்திர முனைப்பு

cam and sever steering gear : (தானி;எந்.) முனைப்பு நெம்புகோல் செலுத்தும் பல்லிணை : இதில் ஒரு குறுக்குச் சுழல் தண்டுடன் ஒரு வகை விரல் சக்கரம் இணைக்கப் பட்டிருக்கும். இது செலுத்துப் பல்லிணைச் சுழல் தண்டின் கீழ் முனையிலுள்ள மாறுபடும் இடைகொண்ட புரியுடைய திருகில் பொருந்திக் கொள்கிறது. திருகின் புரியானது மையத்தில் குறுகலாகவும் முனைகளில் அகன்றும் இருப்பதால், மிகக் குறைந்த அளவு அதிர்ச்சியுடனும் மிக விரைவாக சுற்றி இடமளிக்கிறது

camber : (வானூ.) கோட்டம் : விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் ஒரு பகுதியின் வளைவு. அதன் நாணிலிருந்து வளைவின் மேல்வாட்டமாக உயர்ந்து செல்லும் கோட்டம். இது வழக்கமாக, நாணிலிருந்து விளைவின் விலகலுக்கும், நாணின் நீளத்திற்கு மிடையிலான விகிதமாகக் குறிப்பிடப்படுகிறது. மேல்கோட்டமானது, விமானக் காற்றழுத்தத் தளத்தின் மேற்பரப்புடன் தொடர்புடையது. கீழ்க்கோட்டமானது, இவ்விரண்டின் சராசரி அளவாகும்

கட்டிடக்கலையில், மேல்வளைவுள்ள உத்திரத்தின் அல்லது காலத்தின் மேல் வட்டமான வளைவின் அளவு