பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
135

திரவங்கள் செல்லும்போது ஏற்ற இறக்கத்தை உண்டாக்குகிற ஒட்டிணைப்பு மேற்பரப்பு விறைப்புக் கூட்டு வினைவாக்கம்

capillary tube : (குளி.) நுண்புழைக் குழல் : குளிரால் உறைபதனம் ஊட்டும் பொருள் பாய்வதைக் கட்டுப் படுத்தப் பயன்படும் சிறிய விட்ட முடைய குழல்

capital : (க.க.) தூண் தலைப்பு : அலைமேடை, சதுரத் தூண் அல்லது தூபியின் உச்சிப் பகுதி

capping : (மர.வே.) மூடுகை : வலைப்பாடமைந்த மரத்தின் மொந்தைப் பகுதியில் முடியிடல் அல்லது தொப்பியிடல்

cap screw : தலையணித் திருகாணி : ஒரு சுரையுடனோ சுரையின்றியோ பயன்படுத்தப்படும் முடிவாக்கம் செய்யப்பட்ட எந்திரமரையாணி

capstan : (மின்.) தோல் பட்டை இயக்கி : தோல் பட்டையை இயக்கப் பயன்படும் ஒரு சக்கரம் அல்லது பீப்பாய்

cap stone : (க.க.) தலையணிக்கல் : ஒரு கட்டுமானத்திற்கு தலையணியாக அல்லது மணிமுடியாகப் பயன்படுத்தப்படும் கல்

cap strip : (வானூ.) தலையணி சிம்பு : ஒர் இறகின் ஆதாரப் பட்டி கையின் புறவிவளிம்பிலுள்ள தொடர்ச்சியான உறுப்பு

capsule : (விண்.) விண்வெளிக் கூண்டு : விண்வெளியில் சுற்றி வருவதற்குச் செலுத்தப்படும் கலத்தில் மனிதர் அல்லது விலங்கு இருப்பதற்கு ஏற்ற சூழலுடன் அமைக்கப்பட்டிருக்கும் கூண்டு வடிவக் கொள்கலம்

caption : (அச்சு.) தலைப்பு : ஒர் அத்தியாயத்தின் அல்லது கட்டுரையின் மேலுள்ள தலைப்பு

captive balloon : (வானூ.) கட்டப்பட்ட ஆவிக்கூண்டு : கட்டுப்பாடில்லாமல் பறந்துவிடாதபடி பூமியுடன் ஒரு வடத்தினால் பிணைக்கப்பட்ட ஒர் ஆவிக் கூண்டு

captive firing : (விண்.) சோதனை வெடிப்பு : ஒரு முழு ஏவுகணையைச் சோதனை முறையில் வெடித்துப் பார்த்தல். இந்தச் சோதனை வெடிப்பின்போது உந்து விசையமைப்பு முழுமையாக இயங்குகிறதா எனச் சோதித்துப்பார்க்கப்படுகிறது

carat : மாற்று : ஏறத்தாழ 3.2 குன்றிமணி நிறையுள்ள மணிக்கல் எடை

carbide tools : கார்பைடு கருவிகள் : ஆதாரத்திற்காக எஃகுத் தண்டிலுள் செருகப்பட்ட கார்பைடு முனைகளைக் கொண்ட கருவிகள். இவை உலோகவேலைப் பாடுகளுக்குப் பயன்படுபவை

carbohydrate : (Gag.) கார்போஹைட்ரேட் : கார்பன் ஹைட்ரஜன், ஆக்சிஜன் அடங்கிய ஒரு கூட்டுப்பொருள். இதில் ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் 2:1 என்ற விகிதத்தில் அடங்கியிருக்கும். முக்கியமான கார்போஹைட்ரேட்டுகளில் கார்பனின் அணுக்கள் அல்லது அணுக்களின் மடங்குகள் அடங்கியிருக்கும்

carbolic acid : (வேதி.) கார்பாலிக் அமிலம் : இதனை ஃபினால் என்றும் அழைப்ப்ர். கீலெண்ணெய் வடிப்பினின்று எடுக்கப்படும் இந்த நச்சுப் பொருள் தொற்றொழிப்புப் பொருளாகப் பயன்படுகிறது

carbon : (வேதி.) கார்பன் (கரியம்) :(1) கரிமப் பொருள்கள் அனைத்திலும் காணப்படும் உலோகத் தனிமம் (C)