பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

case hardening : (நோயி.) கரியகக் கடும்பதப்படுத்தல் : பரப்பில் கரியக மூட்டுவதன் மூலம் இரும்பைக் கடும்பதப்படுத்துதல்

casein : (வேதி.) பால் புரதம் : உறைபாற்கட்டியின் அடிப்படைக் கூறாக அமைந்துள்ள பால் புரதம். காலிக்கோ அச்சிடும் முறையில் பயன்படுகிறது. நீர் வண்ணங்கள், வண்ணமெரு கெண்ணெய்கள், தோல் பதனிடல் முதலியவற்றில் ஒட்டுப் பசையாகப் பயன்படுகிறது

casein plastics : (வேதி.) பால்புரதக் குழைமங்கள் : பால் புரதத்திலும் மற்றப் புரதங்களிலும் உள்ள அடிப்படையான மூலப் பொருள். இது தகடுகளாகவும், சலாகைகளாகவும், குழாய்களாகவும் வட்டுருளைகளாகவும் தயாரிக்கப்படுகிறது. இது பொத்தான்கள், பால் காம்புகள் புதுமைப் பொருள்கள், அணிமணிகள், முதலியன தயாரிக்கப் பயன்படுகிறது

casement window : (க.க.) வடக்குப் பலகணி : உட்புறமாக அல்லது வெளிப்புறமாகத் திறக்கும் வகையில் அமைந்த மடக்குப் பலகணி வெளிப்புறமாகக் காற்று, மழை, வெப்பக் காப்புடையதாக இருக்கும்

case rack : (அச்சு.) அச்சுத்தட்டு அடுக்குச் சட்டம் : அச்சகப் பொறுக்குத் தட்டு வைப்பதற்குப் பயன்படும் ஒர் அடுக்குச் சட்டம்

Casing : (க.க.) கவிகை : ஒரு சன்னலை அல்லது கதவினைச் சுற்றியுள்ள கவிகை அமைப்பு

casket : பேழை : விலையுயர்ந்த பொருள்களை வைப்பதற்குரிய சிறிய பெட்டி அல்லது பெட்டகம்.

casion : (அச்சு.) காஸ்லான் அச்சுருப்படிவம் : வில்லியம் காஸ்லான் என்பவர் உருவாக்கிய அச்சுருப் படிவம்

cassiterite : (உலோ.) காசிட்டரைட் : வெள்ளியம் எடுக்கப்படும் கனிமப் பொருள்

cast : (அச்சு.) வார்ப்பட அச்சு : வார்த்து உருவாக்கப்பட்ட அச்சு உருவம்

cast brass : (உலோ.) வார்ப்புருப் பித்தளை : இது ஒர் உலோகக் கலவை. இதில் 65% செம்பும், 35% துத்தநாகமும் கலந்திருக்கும். கடினததன்மையை அதிகரிப்பதற்காக இது சிறிதளவு சேர்க்கப்படுகிறது

cas'tellated : (பொறி.) அரண்மாடம் போன்ற : அரண்மாளிகை போன்று கோட்டை கொத்தளக் கூட கோபுரங்களையுடைய கட்டமைப்பு

அரண்மாடம் போன்ற அமைப்புடைய ஒரு மரையாணி. இதன் நீளத்தில் ஒரு பகுதி, கடையாணிகளை ஏற்பதற்கு ஏற்றவாறு வளைக்கப்பட்டு, துளை விளிம்பும் அமைக்கப்பட்டிருக்கும்

caster : (தானி:எந்.) சாய்வுப் பொறிப்பு : இருசின் இணைப்புக் கொண்டியின் தலைப்பக்கம் கீழ் முனையின் பின்புறமாக இருக்குமாறு அமைத்து, நூற்புக்கதிரின் உடற்பகுதிக்கு 2o-3o சாய்வாக இருக்குமாறு இருசினை அமைக்கும் விளைவினை இது குறிக்கிறது. இந்த விளைவின் மூலம் முன் சக்கரங்கள். கார் செல்லும் திசையிலேயே ஒருங்கிசைவதற்கு வழி உண்டாகிறது

caster cup : சாய்வுப் பொறிப்புக் குவளை : ஒரு சாய்வு பொறிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி அல்லது மரக்குவளை. இது தளத்தைப் பாழ்படுத்தி விடாமல் தவிர்ப்பதற்காக ஒரு விரிந்த பரப்