பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
141

பளவில் ஒரு அறைகலன் நிற்குமாறு அதன் பளுவைப் பரவலாக்குவதற்கு உதவுகிறது

casting : (வேதி.) வார்ப்பு : களி மண்ணிலிருந்து வார்ப்படங்களில் மட்பாண்டங்கள், செய்யும் முறை. உலோகக் கலையில் திர்வ நிலையிலுள்ள உலோகத்தை வார்ப்படத்தில் ஊற்றி உலோகப் பகுதிகளை உருவாக்குதல். இயைபியக்கத்திற்கு உள்ளாக்கப்பட்ட பிசினைத் திரவ வடிவில் வார்ப்படத்தில் ஊற்றிக் கெட்டியாக்குதல்

casting copper : (உலோ.) வார்ப்புச் செம்பு : இது மின்பகுப்புச் செம்பையும், ஏரிப் படுகையில் கிடைக்கும் செம்பையும் விடத் தரத்தில் குறைந்தது. இது பல்வேறு செம்புக் கனிமங்களிலிருந்தும், பித்தளை வார்ப்படத் தொழிற் சாலைகளில் துணைப் பொருளாகவும் பெறப்படுகிறது

casting off : (அச்சு.) வார்ப்புப் பகுப்பீடு : பக்கங்களாகப் பகுப்பீடு செய்வதை அளவீடு செய்வதற்கான அளவீட்டுமுறை

casting strains : (உலோ.) வார்ப்பு இழுவிசை : வார்ப்படத்தில் குளிர்விக்கும் போது ஏற்படும் சுருக்கத்தால் உண்டாகும் விளைவு

casting up : (அச்சு.) வார்ப்புக் கணிப்பு : அச்சுக்கோப்புக்கான செலவினைத் தீர்மானிப்பதற்காக அச்சுக்கோப்பின் அளவை அளவிடுதல்

cast iron : வார்ப்பிரும்பு : கரிமம், பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதிலும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப் பாட்டுக்கு உதவாத நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை

cast iron boiler : வார்ப்பிரும்புக் கொதிகலன் : வார்ப்பிரும்பினால் கிடைமட்டத்திலோ செங்குத்தாகவோ உருவாக்கப்படும் கொள்கலம். குறைந்த அழுத்த நீராவி அல்லது வெந்நீர் தயாரிக்க இது பயன்படுகிறது. சிறிய வடிவள்விலான கொதிகலன்கள் வட்ட வடிவளவிலான நெருப்பு வைக்கும் கணப்புத் தட்டுடனும், இணைப்புத் தட்டுகளுடனும் இணைக்கப்பட்ட கிடைமட்டப் பகுதியுடனும் தள்ளு காப்புகளுடனும் அமைந்திருக்கும். பெரிய வடிவளவிலானவை பெரும்பாலும் செவ்வக வடிவில் செங்குத்தாக அமைந்திருக்கும், இந்தப் பகுதிகளை நீராவி அல்லது நீர் செல்வதற்கான தள்ளு காம்புகளுடன் உட்புறமாக இணைத்திருப்பார்கள்

cast phenolic resins : (வேதி.) (குழை.) வார்ப்புக் கரியப் பிசின் : கரியகக்காடி, ஃபார்மால்டிஹைடு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகைப் பிசின். இது எளிதில் தீப்பற்றுவதில்லை. இது எந்திரத்தின் உதவியால் எளிதில் வினையாற்றக் கூடியது. இது, சேண அணை துணிகள், அலங்காரப் பொருள்கள், ஒளிரும் வண்ணங்கள் முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது

cast resinoids : (குழை.) வார்ப்புப் பிசின் பொருள்கள் : வார்ப்பட முறை மூலமாக உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பொருள்கள்

cast steel : (எந்.) வார்ப்பு உருக்கு : வார்ப்பட முறை மூலமாக தேவையான வடிவத்தில் உருவாக்கப்படும் எஃகு

Cat : கோக்காலி : முக்காலி இணைந்த ஒரு கோக்காலி இதில் நெருப்பில் சூடாக்குவதற்காகப் பண்டம் பாத்திரங்களைத் தாங்கும் ஒரு முக்காலி மேற்பகுதியில் அமைந்திருக்கும்