பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

Catalpa : (மர.வே.) காட்டால்பா மரம் : நெஞ்சுப்பை போன்ற இலைகளையும், ஊது கொம்பு போன்ற மலர்களையும் உடைய ஒருவகை மரம். இதனை அவரை என்றும், சுருட்டுமரம் என்றும் அழைப்பர். இதன் வெட்டுமரம் மென்மையான்து; சொரசொரப் பானது. ஆயினும், மண்ணுடன் இணைந்திருக்கும் போது நெடு நாட்களுக்கு உழைக்கக்கூடியது. இதனை, கம்பங்கள், ஆதாரக்கட்டைகள் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள்

cataract : (நோயி.) கண்புரை நோய் : முதுமை காரணமாகக் கண்ணின் விழித் திரையில் வெண் படலம் ஏற்படுவதால் பார்வை மங்குதல்

catalyst : (வேதி.) வினையூக்கி : தான் எவ்வித மாறுதலோ மாற்றமோ அடையாமல் ஒரு வேதியியல் மாற்றத்தை உண்டாக்குவதற்குத் துணை செய்கிற ஒரு பொருள்

பிளாஸ்டிக்கில் வேதியியல் வினையைத் தூண்டிவிடுகிற ஒரு திரவப் பிசினுடன் அல்லது பிசின் கூட்டுப் பொருளுடன் சேர்க்கப்படும் ஒரு வேதியியல் பொருள். இது மூலக்கூறுகளை ஒருங்கிணைத்து ஒரு சங்கிலி போல் பிணைக்கும். வினை முடிந்ததும் பிசின்

catapult : (வானூ.) எறிவிசைப் பொறி : கப்பல் தளத்திலிருந்து ஆகாய விமானத்தைப் பறக்கச் செய்வதற்கான பொறியமைப்பு

catch basin : நீர்தேக்கக் குழி : சாக்கடையில் கசடு பிரித்து நிறுத்தும் குழியமைவு

catch line : (அச்சு.) கொளுவரி : ஒரு விளம்பரத்தில் பிரதான வரிகளைக் கட்டிப் பிணைப்பதற்குத் தேவையான ஒரு வரி. எனினும் இதில் தேவையற்ற சொற்களும் அடங்கியிருக்கும்

catenary : (கணி.) சங்கிலி வளைவு : செங்குத்துக் கோட்டில் அமையாத இரண்டு குற்றுக்களிலிருந்து தளர்த்தியாகத் தொங்கும் ஒரு சீரான சங்கிலியினால் ஏற்படும் நெளிவு

cathead : (எந்.) கேட்ஹெட் : ஒரு சுழல் தண்டுடன் பொருத்தப்பட்டுள்ள ஒருவளையம். குதிகால் இல்லாத அடுக்குத் திருகுகள்மூலம் இந்த வளையம் இணைக்கப்பட்டிருக்கும். இது ஒரு நிலையான ஆதாரத்தினால் வேலைப்பாட்டில் குறி எதுவும் ஏற்படாமல் தடுக்கிறது

cathode follower : (மின்.) எதிர் முனைப் பின்னோடி : ஒரு சுற்று வழியல்லாத எதிர்முனை தடுப்பானின் குறுக்காக மின்விசையை எடுத்துச் செல்லும் மின்பெருக்கி

cathode rays : (மின்.) எதிர்மின் கதிர்கள் : மின்வெடி நிகழும் காற்றொழி குழலின் எதிர்மின் வாயிலிருந்து செல்லும் எதிர்மின் ஆற்றல் செறிவற்ற துகள்களின் மின்னோட்டம்

cathode-ray screen : எதிர்மின் கதிர்த் திரை : எதிர்மின் கதிர்க் கொடியைத் திருப்பி ஒளியியக்கத் திரை மீது விழச்செய்ய உதவும் அமைவு

cathod-ray tube : (மின்னி.) எதிர்மின் முனைக் கதிர்க்குழல் : எதிர்மின் கதிர்க் கொடின்யத் திரும்பி ஒளியியக்கத் திரைமீது விழச்செய்யும் ஒரு மின்னணுவியல் குழல்

cation : (மின்.) எதிர்க்குறையணு : ஒரு மின்கலத்தில் எதிர்மின் முனையில் தோன்றும் தனிமம் அல்லது நேர்மின் அயனி