பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
143

catwalk : (வானூ.) ஒடுங்கு பாதை : கட்டிறுக்கமான விண்கலத்தின் அடிக்கட்டை நெடுகிலும் உள்ள ஒடுங்கிய நடை பாதை

cat-whisker : (மின்.) இழைத் தந்தி : கம்பில்லா உருமண் இல் வாங்கிக் கருவியில் வேண்டியவாறு அமைத்துக் கொள்ளக் கூடிய இழைத் தந்தி

caul : (பட்) வளைதண்டு : ஒரு வளைவு மேற்பரப்பு வடிவில் மேலோட்டுப் பலகையாக அமைக்கப் பயன்படும் ஒரு கருவி

caulicuius : (க.க.) தூண் தண்டு : கொரிந்திய பாணியிலுள்ள தூண் தலைப்பில் முதன்மையான தண்டுகளில் ஒன்று

caulking : கீர்காப்புச் செய்தல் : பலகை மூட்டுக்களை நீர்க்காப்புடையதாகச் செய்தல்

நார்க்கயிறு - உருகிய நிலக்கீல் ஆகியவற்றைக் கொண்டு பலகைகளின் சந்திப்பு இடைவெளியை அடைத்து நீர் புகாதவாறு செய்தல்

caustic soda : (வேதி.) கடுங்காராத் தீயதை : (NaOH) சோடியம் ஹைடிராக்சைடு - பஞ்சாலைகளில் தூய்மைப்படுத்துவதற்கும் ஆடைகளைத் துய்மை செய்வதற்கும் பயன்படும் பொருள்

cavetto : (க.க.) குழிவார்ப்பு : கால் வட்ட வடிவமான உட்குவான வார்ப்படம்

cavil : குழிவுச் சம்மட்டி : ஒரு முனை மங்கலாகவும் ஒரு முனை உட்குழிவாகவும் உள்ள ஒரு வகைக் கனமான சம்மட்டி, வடி சுரங்கங்களில் கற்களை வடிவமைப்பதற்குப் பயன்படுகிறது

cavitation : (விண்.) நீர்மக்குமிழ் : மிகக் குறைந்த அழுத்த நிலையில் ஒரு பாயும் திரவத்தில் காற்றுக் குமிழிகள் உண்டாதல்

cavity : (குழை.) உட்குழி : எந்திரத்தைப் பயன்படுத்தி அல்லது பல்வெட்டுச் சக்கரத்தின் மூலம் வார்ப்படத்தில் செய்யப்படும் குழிவுகளின் எண்ணிக்கையிைல் பொறுத்து, "ஒரே உட்குழிவு அல்லது பல் உட்குழிவுகள்" கொண்ட வார்ப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன

cavity resonator : (மின்.) புழை ஒலியதிர்வி : ஒரு குறிப்பிட்ட அலை வெண்ணில் இசைவிப்பு செய்யப்பட்ட மின் சுற்றுவழியாகச் செயற்படும் ஓர் உலோக உட்புழை

cedar chest : தேவதாரு பேழை : வீடுகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு வடிவளவுகளிலுள்ள ஒரு வகைப் பேழை. இதில் கம்ப்ளி ஆடைகளைப் பல மாதங்கள் கெடாமல் பாதுகாப்பாக வைக்கலாம்

cedilla : (அச்சு.) ஒளிக் குறியீடு : 'சி' (C) என்ற எழுத்தின் கீழ் இடப்படும் ஒலி வேறுபாட்டுக் குறியீடு

ceiling : (வானூ.) விமான மேல் வரம்பு : விமானம் பறக்கக் கூடிய உயரத்தின் எல்லை

ceiling balloon : (வானூ.) மேல் வரம்பு ஆவிக்கூண்டு : சுதந்திரமாக மேலேறிச் செல்லும் சிறிய ஆவிக்கூண்டு. இது மேலேறிச் செல்லும் வேகத்தை அறிந்து கொள்ளலாம். விமானம் பறக்கக் கூடிய உயரத்தின் மேல் எல்லையை இதன் மூலம் அறுதியிடலாம்

ceiling - height indicator : (வானூ.) மேல் வரம்பு உயரங் காட்டுங் கருவி . மேல் முகட்டின் மீது ஒளி நிழல் வடிவங்களைப் படிய