பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

வைக்கும் கருவியினால் உண்டாக்கப்பட்ட ஒளிரும் திட்டினை ஒரு குறிப்பிட்ட நிலையிலிருந்து பார்க்கும்போது கிடை நிலையிலிருந்து அந்தத் திட்டின் உயரத்தை அளவிடக்கூடிய ஒரு சாதனம்

ceiling joist : (க.க.) முகட்டுத் தூலக் கட்டை : முகட்டில் தாங்கி நிற்கும் மரத்தினாலான குறுக்குக் கட்டை. இது வரிச்சல், சாந்துக் கலவை போன்றவற்றின் மூலம் முகட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்

ceiling projector : (வானூ.) மேல் வரம்பு ஒளியுருப்படிவக் கருவி : ஒரு மேகக் கூட்டத்தின் அடியிலுள்ள ஒளிரும் மண்டலம் ஒன்றை உண்டாக்கும் ஒர் ஒளியுருப்படிவக் கருவிக்கு மேலே மேகக் கூட்டத்தின் அந்தப் பகுதியின் உயரத்தை நிருணயிப்பதற்கு இது பயன்படுகிறது

celestial guidance : (விண்.) விண்வெளி வழிகாட்டி : விண்ணகப் பொருள்களைப் பொறுத்து ஏவுகணையை அல்லது வேறு கலத்தை வழிகாட்டிச் செலுத்தும் அமைவு

celestial mechanics (விண்.) விண்ணக எந்திரவியல் : ஈர்ப்புப் புலங்களின் பாதிப்பின் கீழ் விண்ணகப் பொருள்களின் இயக்கங்களை ஆராய்தல்

cell : (மின்.) மின்கலம் : மின் ஆற்றல் உண்டாகும் மின்கல அடுக்கில் அல்லது வேதியியற் செயற்பாட்டினை நேர்மாறாகத் தாக்கக்கூடிய மின்கல அடுக்கின் ஒற்றை அலகு

cellar : (க.க.) நிலவறை : ஒரு கட்டிடத்தின் முக்கியப் பகுதிக்கு அடித்தளத்திலுள்ள அறை அல்லது அறைகள். இதில் வெப்ப மூட்டும் சாதனமும் அதன் துணைக் கருவிகளும் வைக்கப்பட்டிருக்கும். பொதுவாகத் தரைமட்டத்திலிருந்து தாழ்ந்த மட்டத்தில் முழுவதுமாக அல்லது பகுதியாக நிலவறை தாழ்ந்திருக்கும்

cellaret : புட்டிப் பெட்டி : புட்டிகள் வைப்பதற்கான ஒரு இழுப்பறைப் பெட்டி

cellophane : (வேதி.) செலோஃபேன் : மரப்பசைச் சத்தினின்றும் செய்யப்படும் பளிங்கு நிறத்தாள் போன்ற பொதிபொருளின் வாணிக உரிமைப் பெயர்

cellule : (வேதி.) கண்ணறை அல்லது சிற்றறை : ஒரு விமானத்தில், இற்குகளின் கட்டமைப்பு முழுவதும் உடற்பகுதியின் ஒரு புறமுள்ள இறகின் தாங்கணைவும் அமைந்துள்ள பகுதி

cellulith : மரக்கூற்றுப் பொருள் : மரக்கூழை ஒரு சீரான பிண்டமாகத் திரட்டி. பின்னர் அதனை உலரவைப்பதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. இதில் மரத்தில் செய்வது போன்று வேலைப்பாடுகள் செய்யலாம். இது வன்கந்தகத்திற்கு மாற்றுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது

celluloid (வேதி.) செல்லுலாய்டு நெகிழ்பொருள் : தற்பூரத்தையும் பருத்தி இழைமத்தையும் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கலவை நெகிழ்பொருள். மிக எளிதில் தீப்பற்றக் கூடியது

உள் இழைப்பு வேலைப்பாடுகளில் தந்தத்திற்குப் பதிலாகப் பயன்படும் தந்தம் போன்றநெகிழ் பொருள்

cellulose : (வேதி.) செல்லுலோஸ் : செடியினங்களின் மரக்கட்டைகளுக்கும், பருத்தி போன்ற இழை மங்களுக்கும், உயிர்மங்களின் புறத்தோட்டுக்கும் மூலமான பொருள்