பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

தூளாக்கிய கார்பைடுகளைக் கடினமான முனையுடன் பற்ற வைத்துத் தயாரிக்கப்படும் கருவிகள். உலோகங்களை விரைவாக வெட்டுவதற்குப்பயன்படுகின்றன

cementing trowel : சாந்துப் பூச்சுச் சட்டுவம் : கொத்தனார்கள் பயன்படுத்தும் சட்டுவக்கரண்டி போன்ற கருவி. இது அதைவிடக் கனமானது

cementite : (பொறி.) சிமென்ட்டைட் : கார்பனுடன் இணைந்திருக்கும் இரும்பு. இது கடினமாவதற்கு முன்பு எஃகில் இருக்கும் இரும்பு போன்றது

Center : மையப்புள்ளி : ஒரு வட்டத்தின் ஆரம் அல்லது ஒரு வட்டரையின் ஆரம் எந்தப் புள்ளியின் வழியாக நகர்ந்து செல்கிறதோ அந்த நிலையான புள்ளி

Center distance : மையத் தொலைவு : (1)ஒருபொறியின் பகுதியிலுள்ள துளைகளின் மையங்களுக்கும், (2) ஒரு சுழல் தண்டின்னத் தாங்கும் தாங்கிகளுக்கும், (3) ஒர் ஒவியத்தின் மையத் கோடுகளுக்கும் இடையிலான தொலைவு

Center drill (எந்.) மையத் தூரப் பணம் : ஒரு குறுகலான துரப் துரப்பணக் கருவி பணம். கடைசல் எந்திரங்களில் மையத்துளையிடும் பணிக்குப் பயன்படுகிறது. மையத் துரப் பணம் ஒரு திருகாணித் தலைப்புடன் சேர்த்துச் செய்யப்படுகிறது. இது ஒரே கருவி மூலம் இரண்டு வேலைகளைச் செய்ய உதவுகிறது

தூர்ப்பணக் கருவி

Centered : (அச்சு.) மையம் வைத்தல் : அச்சுக்கோத்த ஒரு வரியின்மை இருபுறமும் சம அளவு இடைவெளி இருக்குமாறு மையத்தில் வைத்து அமைத்தல்

center frequency : (மின்னி.) மைய அலைவெண் : அலைவெண் மாற்ற ஒலிபரப்பு நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அலைவெண், அலைவெண் மாற்றத்தில் மாறாத ஊர்தியின் அலைவெண்

center gauge : மைய அளவு கருவி : ஒரு தட்டையான அளவு கருவி, இது 'V' வடிவ திருகிழைகளை வெட்டுவதற்கும் ஒரு கருவியை அமைப்பதற்கும் பயன்படுகிறது

Center head : (எந்.) மையக் கொண்டை : ஏதேனும் உருண்டையான பொருளின் மையத்தைக் கண்டுபிடிப்பதற்காக ஒர் அளவு கோலுடன் அல்லது ஒர் அலகுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு சாதனம்

Centering : (க.க) பொருத்துச் சட்டம் : மேல் வளைவு அல்லது கவிகையோடு கட்டும்போது பயன் படுத்தப்படும் தற்காலிகமான பொருத்துச் சட்டம்

Centering work : (எந்.) மையக் குறியீடு : கடைசல் கருவியில் கடைசல் பணி செய்வதற்காக ஒரு பொருளின் மையப் புள்ளியைத் துல்லியமாகக் கண்டுபிடித்தல், உருளைகளின் மையப் புள்ளியைக் கண்டுபிடிக்க முரண் விட்டமானியைப் பயன்படுத்தலாம்

centerless grinding : (எந்.) மைய மிலாச்சாணை : அதிவேகமாக இயங்கும் ஒரு சாணைச் சக்கரம், எதிர்மாறான திசையில் மெதுவாக நகர்கின்ற அமைப் பினையுடைய ஒரு பொறியினால் இது நடைபெறுகிறது. இரு சக்கரங்களுக்குமிடையிலான இடுக்கமான பகுதியில், இந்த வேலைப்பாட்டுக்கான ஆதாரம் அமைந்திருக்கிறது