148
மையத்தை அல்லது ஒரு வட்டத்தின் வில்லின் மையத்தைக் கண்டு பிடிக்கப் பயன்படும் ஒரு கருவி. கடைசல் செய்யப்பட வேண்டிய ஒரு சுழல் தண்டின் அல்லது நீள் உருளையின் முனையின் மையப் புள்ளியைக் கண்டுபிடிக்கப் பயன்படுகிறது
centre of suspension : தொங்கல் மையம்
center table : (மர, வே.) மைய மேசை : ஓர் அறையின் மையத்தில் வைப்பதற்கு ஏற்ற வகையில் எல்லாப் பக்கங்களிலும் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு மேசை
centigrade scale : சென்டிகிரேட் அளவை : நீர் உறைநிலை ௦ பாகையாகவும், கொதிநிலை 100 பாகையாகவும் வகுக்கப்பட்டுள்ள வெப்ப மானி. அமெரிக்காவில் முக்கியமாக அறிவியல் பணிகளுக்காகப் பயன்படுகிறது
centimeter : சென்டிகிரேட் : மெட்ரிக் முறையில் குறைந்த நீள அலகுஃபிரெஞ்சு நாட்டின் நீட்டல் அளவையில் நூற்றில் ஒரு கூறு. 0.3937 அங்குல நீளம்
central station : (மின்.) மைய மின் நிலையம் : மின்னொளி வழங்கப்படும் ஒரு மின்னாக்க நிலையம். இங்கிருந்து நுகர்வோருக்கு மின்னொளியும், மின்விசையும் வழங்கப்படுகிறது
centrifugal : (பட்.) மையம் விட்டோடும் விசை : மையமொன்றைச் சுற்றிச் சுழலும் பொருள்களில் மையத்துக்கு எதிர்திசையில் செயற்படும் விசையாற்றல்
centrifugal flow engine : (வானூ.) விரி மையப் பாய்வு எஞ்சின் : மையம் விட்டோடும் அழுத்துப் பொறியையுடைய , சாற்று விசை உருளி எஞ்சின்
centrifugal spark advance : விரிமையச் சுடர்ப்பொறி வளர்ச்சி : உந்துவண்டியில் எஞ்சின் வேகம் மாறுபடுகிறபோது சுடர்ப்பொறி ஏற்றம் பெறுகிற அல்லது குறைகிற அமைவுடைய காலக் கணிப்பான், பகிர்ப்பான், வேகங்காக்கும் விசையமைவு
centrifugal switch : (மின்.) மையம் விலகு இணைப்பு விசை : ஒற்றை நிலைப்பிளவு நிலை மின்னோடியில் பயன்படுத்தப்படும் ஒருவகை இணைப்பு விசை. மின்னோடி இணக்க வேகத்தை எட்டிய பிறகு தொடக்கச் சுருணையை இயக்கி வைக்க இது பயன்படுகிறது
centrifugal type super charger : மையம் விலகு வகை மீவிசைக் காற்றடைப்பான் : விமானத்திலுள்ள மீவிசைக் காற்றடைப்புக் குழாய். இதிலுள்ள ஒன்று அதற்கு மேற் பட்ட அலகுள்ள தூண்டு தட்டங்கள், மையம் விட்டோடும் செயல் மூலமாக, ஒரு தூண்டு கருவியில் காற்றினை அல்லது கலவையை அழுத்திச் செறிவாக்குகிறது
century (அச்சு.) நூற்று முகப்பு அச்செழுத்து : புத்தக வேலையில் பயன்படுத்தப்படும் அச்செழுத்தின் முகப்பு
ceramics : மட்பாண்டத் தொழில் வேட்கோவர் கலை : சுட்ட களி மண்ணிலிருந்து பாண்டங்கள் செய்யும் கலை. அவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்களையும் இது குறிக்கிறது
cerasin : (வேதி.) மரப்பிசின் : மர வகைப் பிசினின் கரையாமலிருக்கும் ஒரு பொருள். இது மஞ்சள் அல்லது வெண்ணிறத்தில் மெழுகு போல் இருக்கும். மெழுகுத் திரி மின்காப்பு ஆகியவைகளில் பயன்படும் புதைபடிவ அரக்குப்