பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
149

பொருளைத் துய்மைப்படுத்துவதன் மூலம் இது பெறப்படுகிறது. இது தேன்மெழுகுக்கு மாற்றாகப் பயன்படுகிறது

cerebellum : (உட.) சிறுமூளை : தலையின் பின்பக்கத்தில் உள்ள சிறுமூளை

cerebrum : (உட.) பெரு மூளை : தலையின் முன்பக்கத்திலுள்ள பெரு மூளை

தண்டு வடம்

cerebro - spinal fluid : (உட.) மூளை - முதுகந்தண்டுத் திரவம் : மூளையைச் சுற்றிலும் முதுகத்தண்டிற்குள்ளேயும் உள்ள திரவம்

cerium : சீரியம் : (இயற்.) அணு எண் 58 உள்ள உலோகத் தனிமம்

cerium : (வேதி.) சீரியம் : இது ஒர் உலோகத் தனிமம். அணு எண் 58 உடையது. இதன் வீத எடை மானம் 6.92. இது நிறத்திலும் பளபளப்பிலும் இரும்பை ஒத்தது. ஆனால் மென்மையானது; எளிதில் வளைந்து கொடுக்கக் கூடியது; கம்பியாக இழுத்து நீட்டக் கூடியது. இதனாலான பொருள்கள், சாய வேலையிலும், வாயு ஒளித்திரை வலைகள் செய்வதிலும் சிகரெட்டுப் பற்றப்வைப் பான்கள், எரிவாயுப் பற்றவைப் தண்டு வடம் பான்கள் செய்வதிலும் பயன்படுத்தப்படுகின்றன

Certificate : சான்றிதழ் : சில சாதனைகளில் மெய்ம்மைக்கு அளிக்கப்படும் ஒரு நற்சான்று ஆவணம் அல்லது எழுத்துச் சான்று நற்சான்று ஆவணம் அல்லது நற்சான்றிதழ் வழங்குதல்

cerussite : செருசைட் : (PbCo3) ஓர் ஈயக் கனிம வகை. நிறமற்றதாக அல்லது வெண்மை அல்லது மஞ்சள் நிறத்தில் ஒளி ஊடுருவக் கூடிய படிகங்களாகக் கிடைக்கிறது

cesium : (வேதி.) சீசியம் : வெள்ளி போல் வெண்மையான உலோகத் தனிமம்.ஒளிமின்கலங்களில் பயன்படும் செயலுக்கம் மிகுந்த ஒரு பொருள்

cesspool : (கம்.) வடிகுட்டை : மலக்கழிவின் வண்டல் பிரித்து நீர் உள்வாங்கும் பள்ளம்

cetane rating : சீட்டேன் வீத அறுதி எண் : டீசல் எந்திர எரி பொருளின் எரிபண்பளவைக் கூற்றெண் 30-50 வீத அறுதி எண்னுடைய எரிபொருள்கள் வழ வழப்பற்ற (உராய்வுடைய) டீசல் எரிபொருள்கள் என்றும், 50-80 வீத அறுதி எண்ணுடையவை வழ வழப்பான (உராய்வற்ற) டீசல் எரிபொருள்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன

Chafe : உரசித் தேய்த்தல் : உரசித் தேய்த்துத் தேய்மானம் செய்தல்

Chain drive : (தானி; எந்.) சங்கிலி ஆற்றல் தொடுப்பு : சங்கிலி மூலமான ஆற்றல் தொடுப்பு. இதில் சங்கிலித் தொடர் போன்ற வார்ப் பட்டை மூலம் மின்விசை அனுப்பப்படுகிறது. உந்துவண்டிகளில் சக்கரங்களை இயக்குவதற்கும் இது பயன்படுகிறது

Chain hoist : (பொறி.) சங்கிலி உயர்த்தி : கயிற்றுக்குப் பதிலாகச் சங்கிலியைப் பயன்படுத்தி பாரத்தை மேலே தூக்குவதற்குப் பயன்படும் எந்திரம்

Chain pipe vise : சங்கிலிக் குழர்ய்க் குறடு: எந்திரத்தின் குறடுபோல் புற்றிக்கொள்ளும் ஆலகில் ஒரு கனமான சங்கிலியைப் ப்யன்படுத்திக் குழாயைப்