150
பிணைப்பதற்குரிய இடம் விட்டு இடம் செல்லக்கூடிய ஒரு வகைக் குறடு
Chain pulley : (எந்.) சங்கிலிக் கப்பி : கப்பியில் கயிறு ஓடுவதற்கான பள்ளம் உடைய ஒரு சக்கரம் அல்லது கப்பி, இதில் ஒரு சங்கிலியின் கண்ணிகள் நுழைத்துக் கொள்வதற்கான பள்ளங்கள் இருக்கும்.
Chain riveting : (பொறி.) சங்கிலிப் பிணைப்பு : இரட்டை அல்லது பல வரிசைகளில் ஆணிகளைக் கொண்டு இணைத்தல், அல்லது பிணைத்தல். இதில் குடையாணிகள் ஒன்றுக்கொன்று நேர் எதிராக இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும்
Chain tongs : (கம்.) சங்கிலிப் பற்றுக் குறடுகள் : குழாய் திரும்பி விடாமல் பிடித்துக்கொள்வதற்கு அல்லது குழாயைத் திருப்புவதற்குப் பயன்படும் ஒரு வகைக் குறடு. இது கனமான இரும்புத்தண்டினாலானது. இதன் ஒரு முனையில் கூர்மையான பற்கள் அமைந்திருக்கும். இந்தப் பற்கள் குழாயை இறுகப்பற்றிக் கொள்ளும்
Chain transmission : (எந்.) தொடர் விசையியக்கம் : விசையை அனுப்புவதற்குப் பயன்படும் ஒரு முறை. எந்திர உறுப்புகளிடையே விசையுறுப்பின் விசைஏற்று இயங்குறுப்பினை தொடர்ச்சியாக இயங்கச் செய்வதற்குப் பயன்படுகிறது
Chair glide : நாற்காலிக் கவிகை : இதனை ஒலியற்ற கவிகை என்றும் அழைப்பர். இது அறைகலன்களின் காலடியில் மேலுறையாக இறுகலாகச் செருகப்பட்டிருக்கும். இதனால் அறைகலன்களை சத்தமின்றி தரையிலும் விரிப்புகளின் மேலும் நகர்த்தலாம்
Chair rail : (க.க.) சாய்வுக் கம்பியழி : சுவரின் சாந்துக்குச் சேதம் எற்படாதவாறு காப்பதற்காக நாற்காலியின் பின்புற உச்சியின் அளவுக்குசுவரில் இணைக்கப்பட்டுள்ள மரத்தாலான பட்டை அல்லது வார்ப்பட வார்ப்பட்டை
Chaise longue : சாய்விருக்கை : ஒரு புறச்சாய்வு வசதியுள்ள நீளச் சாய்விருக்கை. இது ஃபிரெஞ்சுப் பாணியிலமைந்த் நீள் சாய்விருத்கை. 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் முதன் முதலாக இது தயாரிக்கப்பட்டது. அப்போது இது இருகை நாற்காலிகளையும், ஒரு முத்காலியைக் கொண்ட மூன்று பகுதிகளைக் கொண்டிருந்தது
chalcedony : வேன்மணிக்கல் : நீலச்சாயலுடைய வெண்ணிற மணிக்கல் வகை
Chalcocite : (உலோ.) சால்கோசைட் : (Cu2S) இது செப்புக்கனிமம். இது ஒருவகை செப்புச் சல்பைடு
Chalcopyrite : (உலோ.) சால்கோபைரைட் : (CuFeS2) இது ஒரு செம்புக் கலவை வகை. செம்பும் இரும்பும் கலந்த ஒரு மஞ்சள் நிறச்சல்பைடு
Chalk : (கணி.)சீமைச் சுண்ணாம்பு : நுண்ணிய கடல் உயிரிகளின் நுண்துளைகளைக் கொண்ட சிப்பிகளினாலான மென்மையான வெண்சுதைப் பாறை
Chalking : (குழை.)வெண்சுதையாக்கம் : பிளாஸ்டிக் மேற்பரப்புக்களை வெண்சுதை போன்று தோன்றுமாறு செய்தல்
Chalk line : நொடிப்புக் கோட்டு இழை : சுழல் தண்டு, எந்திரம் முதலியவற்றை தரையில் பொருத்துவதற்காகத் தரையில் ஒரு நேர் கோடு போடுவதற்காகப் பயன்படும் வெண்சுதை பூசப்பட்ட ஒரு